• Home
  • தமிழ்நாடு
  • பைந்தமிழியக்கம், 95-ஆம் திங்கள் பொழிவு, அரசு சையது முர்துஷா மேல்நிலைப்பள்ளி, திருச்சி, இன்று 30.11.2024 மாலை நடைபெறுகிறது.
தமிழ்நாடு

பைந்தமிழியக்கம், 95-ஆம் திங்கள் பொழிவு, அரசு சையது முர்துஷா மேல்நிலைப்பள்ளி, திருச்சி, இன்று 30.11.2024 மாலை நடைபெறுகிறது.

Email :218

பைந்தமிழியக்கம், திருச்சிராப்பள்ளி, 95-ஆம் திங்கள் பொழிவு, இன்று 30.11.2024 மாலை அரசு சையது முர்துஷா மேல்நிலைப்பள்ளி, திருச்சிராப்பள்ளி, நடைபெற்றது.

இந்நிகழ்ச்சி தமிழ்த்தாய் வாழ்த்துடன் தொடங்கியது.


இயக்குநர் பைந்தமிழ் இயக்கம், புழவர் பழ. தமிழாளன் தலைமை தாங்கி வரவேற்புரை ஆற்றினார். தலைமை ஆசிரியை, சையது முர்துஷா மேல்நிலைப்பள்ளி, தமிழ்த்திரு. ம. மெர்சி சேம்சு, முன்னிலை வகித்தார்.

மாணவர் அரங்கத்தில், எஸ்.ஆர்.வி. சீனியர் செகண்டரி பப்ளிக் பள்ளி  பிராட்டியூர்,
செ. வெ. தேவசேனா, 9ஆம் நிலை, அண்ணல் காந்தி என்ற தலைப்பில் உரையாற்றினார்.

இரா. தனிசா மேகனா, 7 ஆம் நிலை, தமிழறிஞர் பண்டிதமணி கதிரேசனார் என்ற தலைப்பில் உரையாடினார். செ. யோகித் 10 ஆம் நிலை, வீரமாமுனிவர், என்ற தலைப்பில் உரையாடினார். சு.க. ஹர்ஷினி, 12 ஆம் நிலை, அறிவியல் அறிஞர் அப்துல் கலாம், என்ற தலைப்பில் உரையாடினார்.


பாவலர் க. செல்வராசன், மரபு போற்றல் மாந்தர் கடன் என்ற தலைப்பில் உரையாடினார். தமிழாசிரியர் த. சித்ரா, எஸ்.ஆர்.வி.சீனியர் செகண்டரி பப்ளிக் பள்ளி, போரும் வாழ்வும் என்ற தலைப்பில் உரையாடினார்.


பேராசிரியர் முனைவர் சோதி இலக்குமி, பிஷப் ஹீபர் கல்லூரி திருச்சி, வாடு பயிர் கண்டு வாடு அருள் வள்ளலார், ஆய்வரங்கம் நடத்தினார். பாவலர் சொ.  வேல்முருகன், துணை இயக்குநர், பைந்தமிழ் இயக்கம், தொகுப்புரை வழங்கினார்.

புலவர் பழ. தமிழாளன், இயக்குநர் பைந்தமிழ் இயக்கம், நன்றி உரையாற்றினார். இந்நிகழ்ச்சியில் திருச்சிராப்பள்ளி வாசகர் வட்டம் தலைவர் கவிஞர் வீ. கோவிந்தசாமி,

எழுத்தாளர்கள், கவிஞர்கள் பேச்சாளர்கள், ஆசிரியர்கள் பேராசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.


பைந்தமிழ் இயக்கத்தின் 95 ஆம் நாள் திங்கள் பொழிவு இனிதே நிறைவுற்றது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Posts