அரசுப் பள்ளி என்பது வறுமையின் அடையாளம் அல்ல பெருமையின் அடையாளம் என்று அரசுப் பள்ளி மாணவர்களை அகிலம் பாராட்டக்கூடிய அளவிற்கு உயர்த்திய தமிழ்நாடு அரசின் உடைய மாண்புமிகு பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் பாசத்திற்குரிய அண்ணன் காவிரி மைந்தன் திரு. அன்பில் மகேஷ் பொய்யாமொழி அவர்களுக்கு இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள்.

அரசுப் பள்ளிக்கு அகில உலக அளவில் பெருமையையும் பாராட்டையும் உருவாக்கித் தந்தவர் மட்டுமல்லாது அரசுப் பள்ளிகளில் அறிவியல் கண்காட்சி நடத்தி மிக முக்கியமாக கலைத்திருவிழா என்கின்ற ஒரு ஒப்பற்ற பள்ளி மாணவர்களுடைய கலைத்திறமையை படைப்புத் திறமையை ஆக்கப்பூர்வமான சிந்தனை ஆற்றலை வளர்த்தெடுத்து அரசு பள்ளி மாணவர்களின் தந்தையாக தோழனாக செயல்படுகின்ற மதிப்பிற்குரிய மலைக்கோட்டை மண்ணின் இளைஞர்கள் கொண்டாடும் செயல்மிகு பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அவர்களை பிறந்தநாளில் பெருமையோடு வாழ்த்துகிறோம்.

வாழிய பல்லாண்டு என்று பெருமையோடு வாழ்த்தும் பேராசிரியர் கி. சதீஷ்குமார் தமிழ்த்துறை கலைக் காவிரி நுண்கலைக் கல்லூரி, திருச்சிராப்பள்ளி மற்றும் செயலாளர் தண்ணீர் அமைப்பு, மாநகர மாவட்டச் செயலர், தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றம்.











