• Home
  • இந்தியா
  • சமூக சேவை செய்பவர்களுக்கு  “நளதம்  விருது” வழங்கி கௌரவிக்கப்பட்டது.
இந்தியா

சமூக சேவை செய்பவர்களுக்கு  “நளதம்  விருது” வழங்கி கௌரவிக்கப்பட்டது.

Email :243

காஞ்சிபுரம் மாவட்டம் அச்சரப்பாக்கம் பகுதியில் உள்ள அன்னை திருமண வளாகத்தில் தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் சமூக சேவை செய்பவர்களுக்கு  “நளதம்  விருது” வழங்கி கௌரவிக்கப்பட்டது.

காஞ்சிபுரம் முத்தமிழ் சங்கத்தின் சார்பாக காஞ்சிபுரம் மாவட்ட கழகச் செயலாளர் மாண்புமிகு சுந்தர் ஐயா அவர்கள் முன்னிலையிலும்  மாண்புமிகு தமிழ்நாடு சிறுபான்மை துறை அமைச்சர் திரு நாசர் அவர்கள் விருது வழங்கி சிறப்புரை வழங்கினார்.

மற்றும் காஞ்சிபுரம் நாடாளுமன்ற உறுப்பினர் திரு செல்வம் வாழ்த்துரை வழங்க பாலம் கல்யாணசுந்தரம் மற்றும் மாவட்ட அரசு காஜி செங்கல்பட்டு பல்லுஹக் தாவூத் வாழ்த்துரை வழங்க காஞ்சி முத்தமிழ் சங்கத்தின் தலைவர் திரு லாரன்ஸ் அவர்கள் நன்றியுரை வழங்க திருச்சிராப்பள்ளி மாவட்டத்தின் சார்பாக பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களுக்கு போதைப் பழக்கம் குறித்த விழிப்புணர்வு வழங்கியமைக்கும்  தற்கொலை தடுப்பு ஆலோசனைக்கும் திருச்சி ஆத்மா மனநல மருத்துவமனையின் சமூக மனநல ஆலோசகர் திரு கரன் லூயிஸ் அவர்களுக்கு 

நளதம் என்னும்  விருது வழங்கி கௌரவிக்கப்பட்டது.
இதில் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் சேர்ந்த 43 பேருக்கு மாவட்ட வாரியாக விருதுகள் வழங்கப்பட்டது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Posts