தமிழ்நாடு

புத்தக வாசிப்பை நேசிப்போம்!

Email :125

திருச்சிராப்பள்ளி புத்தூர் கிளை நூலகம் வாசகர் வட்டம் சார்பில் புத்தக வாசிப்பை நேசிப்போம் நிகழ்ச்சி நூலகத்தில் நடைபெற்றது.  புத்தூர் கிளை நூலக வாசகர் வட்ட தலைவர் யோகா ஆசிரியர் விஜயகுமார் துவக்க உரையாற்றினார் நூலக பணியாளர் மீனாட்சி சுந்தரம் பேசுகையில், புத்தக வாசிப்பு, சிந்தனை வளர்ச்சியை தூண்டுகின்றன. ஒருவரை பக்குவப்படுத்துகிறது பண்படுத்துகிறது.   தன்னை மேம்படுத்துகின்ற சிறந்த புத்தகங்களை நேசித்து வாசித்தால் நன்மை பயக்கும்.  ஒவ்வொரு புத்தகத்தை வாசிக்கும்போதும் ஓர் புதிய அனுபவத்தை உணரலாம்.

அனுபவத்தின் முதல் ஆசான் புத்தகமே என்றார்.
திருச்சிராப்பள்ளி பணத்தாள்கள் சேகரிப்போர் சங்க செயலர் குணசேகரன், சங்க கால நாணயங்கள் சேகரிப்பாளர் முகமது சுபேர்,  வரலாற்று துறை முதுகலை மாணவர் அரிஸ்டோ, சுடுமண் பொருட்கள் சேகரிப்பாளர் சந்திரசேகரன், நாணயங்கள் சேகரிப்பாளர் முத்து வீரப்பன், மன்சூர் உட்பட பலர் நிகழ்வில் பங்கேற்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Posts