• Home
  • தமிழ்நாடு
  • ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் நூலக உறுப்பினர் சேர்க்கை விழா!
தமிழ்நாடு

ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் நூலக உறுப்பினர் சேர்க்கை விழா!

Email :258

அரவக்குறிச்சி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் நூலக உறுப்பினர் சேர்க்கை விழா! அரவக்குறிச்சி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் பயிலும் மாணவர்களுக்கு அரவக்குறிச்சி கிளை நூலகத்தில்  உறுப்பினராகச் சேர்க்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.

நிகழ்ச்சிக்கு வட்டாரக்கல்வி அலுவலர் பாண்டித்துரை தலைமை வகித்தார். வட்டாரக்கல்வி அலுவலர் சதீஷ்குமார் முன்னிலை வகித்தார். வட்டாரக்கல்வி அலுவலர் பாண்டிதுரை அவர்கள் தான் போட்டித்தேர்வில் வெற்றி பெற நூலகம் எவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்ததுஆக என்பதை விளக்கிக் கூறினார்.
சதீஷ்குமார் அவர்கள் ஒரு நூலகம் திறக்கப்பட்டால் 100 சிறைச்சாலை மூடப்படுவதாக கூறி நூலகம் செல்வதன் அவசியங்களை எடுத்துரைத்தார்.

தன்னுடைய குக்கிராமத்தில் நூலகத்தினால் பயனடைந்தவர்களின் எண்ணிக்கையை பட்டியலிட்டார். தலைமையாசிரியர் சாகுல் அமீது நமது முன்னாள் கல்வித்துறைச் செயலர் உதயச்சந்திரன் அவர்கள் ஐ.ஏ.எஸ் தேர்வில் வெற்றி பெறுவதற்குக் காரணம் ஆறாம் வகுப்பில் இருந்து செய்தித்தாள்களைப் படித்தது தான் என்றும், நூலகங்களைப் பயன்படுத்த வேண்டியதன் அவசியத்தையும் எடுத்துரைத்தார். கிளை நூலகர்  இளையசபரி நூல் நிலையத்தில் உள்ள பல்வேறு புத்தகங்கள் பற்றியும், நூலக வளர்ச்சிக்குப் புரவலராக ரூபாய் ஆயிரமும், பெரும்புரவலருக்கு 5000 மும், கொடையாளருக்கு ரூ.10,000 கொடுத்து நூலக வளர்ச்சிக்கு உதவலாம் என்பதை எடுத்துரைத்தார். மேலும் 161 மாணவர்களுக்கு நூலக உறுப்பினர் அட்டை வழங்கப்பட்டது.

இந்த நூலக உறுப்பினர் அட்டைக்கான கட்டணம் ரூபாய் 3220 கட்டணத் தொகையை  வழங்கிய திண்டுக்கல் மருத்துவக் கல்லூரி இளநிலை உதவியாளர் ரூபன்ராஜ் அவர்களுக்கு நன்றி கூறப்பட்டது.

தலைமை ஆசிரியர் சாகுல் அமீது கிளை நூலகத்திற்கு புரவலராக இணைந்தார்.
பட்டதாரி ஆசிரியர் ஷகிலா பானு நன்றி கூறினார். சகாய வில்சன் நிகழ்ச்சிகளை ஒருங்கிணைத்தார்.ராபியா பஸ்ரி,ரொகையாபீவி,கவிதா, புவனேஸ்வரி ஜோதிமணி, உஷாராணி,தஸ்லிம் ஆசிரியர்கள் நிகழ்ச்சியில் பங்கேற்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Posts