
சிரா இலக்கியக் கழகம், திருச்சி, எழுத்தாளர் கேத்தரின் ஆரோக்கியசாமி, துணைத் தலைவர் அவர்களின் இல்லத்தில் நேற்று 23.12.2024 மாலை கிறிஸ்துமஸ் விழா சிறப்பாக நடைபெற்றது.
இந்நிகழ்ச்சியில் திருச்சிராப்பள்ளி சிரா இலக்கியக் கழகத்தின் தலைவர், நிர்வாகிகள், திருச்சிராப்பள்ளித் தமிழ்ச் சங்கத்தின் அமைச்சர், திருச்சிராப்பள்ளி வாசகர் வட்டம் தலைவர், நிர்வாகிகள், தமிழ்ச் சான்றோர்கள், கவிஞர்கள், எழுத்தாளர்கள், ஆசிரியர்கள், பேராசிரியர்கள், நண்பர்கள் மற்றும் பலர் கலந்து கொண்டனர். இந்நிகழ்ச்சியில் பங்கேற்ற அனைவரும் சிறப்புரை ஆற்றி, இயேசு கிறிஸ்துவின் மகிமையை எடுத்துரைத்து பாடல்கள் பாடினர். நிகழ்ச்சியின் நிறைவில் அனைவரும் விளையாட்டு போட்டிகள் நடத்தி பங்கேற்று மகிழ்ந்தனர். இந்நிகழ்ச்சியில் பங்கேற்ற அனைவரும் துணைத் தலைவர், எழுத்தாளர் கேத்தரின் ஆரோக்கியசாமி அவர்களுக்கு நன்றி கூறினார்கள். அனைவருக்கும் இரவு உணவும் வழங்கி துணைத் தலைவர் மகிழ்ந்தார்.













