
கிறிஸ்தவர்களின் முக்கிய பண்டிகையான கிறிஸ்து பிறப்பை முன்னிட்டு இன்று உலகம் முழுவதும் கிறிஸ்துமஸ் தின விழா கோலாகலமாக கொண்டாடப்பட்டது இதனையொட்டி அனைத்து கிறிஸ்தவ தேவாலயங்களிலும் நள்ளிரவு சிறப்பு திருப்பலியும் நேற்று காலை முதல் சிறப்பு திருப்பலியும் நடைபெற்றது. கிறிஸ்து பிறப்பை முன்னிட்டு அனைத்து கிறிஸ்துவர்களும் வீடுகள் தோறும் கேக் வெட்டி கொண்டாடி மகிழ்ந்தனர். கிறிஸ்மஸ் விழாவை முன்னிட்டு பல்வேறு தேவாலயங்களில் மாட்டு தொழுவத்தில் கிறிஸ்து பிறந்ததை குறிப்பதை முன்னிட்டு குடில்கள் அமைக்கப்பட்டன.

இந்த நிலையில் திருச்சி பொன்மலை புனித சூசையப்பர் தேவாலயத்தில் கிறிஸ்துமஸ் தின விழாவை முன்னிட்டு சிறப்பு திருப்பலி நடைபெற்றது. சிறப்பு திருப்பலியை பங்கு தந்தை சேகர் செபாஸ்டின் நடத்தி வைத்தார்.

அதனைத் தொடர்ந்து அங்கு கோவில் வளாகத்தில் அமைக்கப்பட்டிருந்த மிகப்பிரமாண்டமான மாட்டு தொழுவ குடிலை கிறிஸ்தவர்கள் மட்டுமல்லாமல் பொதுமக்களும் பார்த்து அதில் உள்ள குழந்தை இயேசுவை வழிபட்டு சென்றனர். இந்த பிரம்மாண்டமான குடிலுக்கான ஏற்பாடுகளை பாஸ்கா கலைக்குழுவினர் செய்திருந்தனர்.













