• Home
  • தமிழ்நாடு
  • திருச்சி மாநகர காவல் துறை சமூக நீதி மற்றும் மனித உரிமை பிரிவு சார்பில் சமூக நீதி மற்றும் மனித உரிமை குறித்து விழிப்புணர்வு கூட்டம் ஸ்ரீரங்கம் சரக காவல் உதவி ஆணையர் கிருஷ்ணன் தலைமையில் 05.01.25 நடைபெற்றது.
தமிழ்நாடு

திருச்சி மாநகர காவல் துறை சமூக நீதி மற்றும் மனித உரிமை பிரிவு சார்பில் சமூக நீதி மற்றும் மனித உரிமை குறித்து விழிப்புணர்வு கூட்டம் ஸ்ரீரங்கம் சரக காவல் உதவி ஆணையர் கிருஷ்ணன் தலைமையில் 05.01.25 நடைபெற்றது.

Email :108

திருச்சி மாநகர காவல் துறை சமூக நீதி மற்றும் மனித உரிமை பிரிவு சார்பில் சமூக நீதி மற்றும் மனித உரிமை குறித்து விழிப்புணர்வு கூட்டம் ஸ்ரீரங்கம் சரக காவல் உதவி ஆணையர் கிருஷ்ணன் தலைமையில் 05.01.25 நடைபெற்றது.

சிறப்பு விருந்தினர்களாக மாவட்ட முதலாவது கூடுதல் அமர்வு நீதிமன்றம் சிறப்பு அரசு வழக்கறிஞர் சக்திவேல், மாவட்ட குழந்தை நலக்குழு உறுப்பினர் முனைவர் பிரபு மகிளா  சிறப்பு நீதிமன்றம் சிறப்பு அரசு வழக்கறிஞர் சுமதி ஆகியோர் சமூக நீதி மற்றும் மனித உரிமை என்றால் என்ன  குழந்தைகளின் நான்கு வகையான உரிமைகள் வாழ்வதற்கான உரிமை வளர்ச்சிக்கான உரிமை பாதுகாப்பிற்கான உரிமை

பங்கேற்பதற்கான உரிமை மற்றும் மனித உரிமைகள் வாழ்வுரிமை சுதந்திர உரிமை சமத்துவ உரிமை தனிநபர் மாண்பு குறித்தும் மனித உரிமை பாதுகாப்பு  சட்டம் 1993 பட்டியல் சாதி மற்றும் பழங்குடியினர் மீதான வன்கொடுமை தடுப்பு சட்டம் 1989 மற்றும் திருத்தச் சட்டம் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை விழிக்கண் குழு செயல்பாடுகள் தேசிய மற்றும் மாநில மனித உரிமை ஆணையம்  செயல்பாடுகள், பணிகள் குறித்தும் பெண்கள் குழந்தைகள் பாதுகாப்பு குறித்தும் விழிப்புணர்வு வழங்கினார்கள்.

தீண்டாமை ஒழிப்பு குறித்த உறுதிமொழி எடுக்கப்பட்டது. சமூக நீதி மற்றும் மனித உரிமைகள் பிரிவு காவல் உதவி ஆணையர் தங்கதுரை நன்றி கூறினார். மாநகர காவல் துறை குழந்தை கடத்தல் தடுப்பு பிரிவு காவல் ஆய்வாளர் வசுமதி வரவேற்புரை ஆற்றினார். விழிப்புணர்வு கூட்டத்தில் 200க்கும் மேற்பட்ட பொதுமக்கள் குழந்தைகள் கலந்துக் கொண்டனர். சமத்துவ மதிய உணவு அனைவருக்கும் வழங்கப்பட்டது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Posts