• Home
  • தமிழ்நாடு
  • நாகமங்கலம் ஊராட்சியில் உள்ள குட் சமாரிடன் உயர்நிலைப்பள்ளியில் சில்ட்ரன் சாரிடபிள் டிரஸ்ட் சார்பாக  இரும்பு சத்து குறைபாடு மற்றும் ரத்த சோகையில் உள்ள குழந்தைகளுக்கு சில்ட்ரன் சாட்டபிள் சார்பாக ஊட்டச்சத்து பெட்டகமானது வழங்கப்பட்டது.
தமிழ்நாடு

நாகமங்கலம் ஊராட்சியில் உள்ள குட் சமாரிடன் உயர்நிலைப்பள்ளியில் சில்ட்ரன் சாரிடபிள் டிரஸ்ட் சார்பாக  இரும்பு சத்து குறைபாடு மற்றும் ரத்த சோகையில் உள்ள குழந்தைகளுக்கு சில்ட்ரன் சாட்டபிள் சார்பாக ஊட்டச்சத்து பெட்டகமானது வழங்கப்பட்டது.

Email :128

இன்று திருச்சி மாவட்டம் மணிகண்டம் ஒன்றியத்தில் உள்ள நாகமங்கலம் ஊராட்சியில் உள்ள குட் சமாரிடன் உயர்நிலைப்பள்ளியில் சில்ட்ரன் சாரிடபிள் டிரஸ்ட் சார்பாக  இரும்பு சத்து குறைபாடு மற்றும் ரத்த சோகையில் உள்ள குழந்தைகளுக்கு சில்ட்ரன் சாட்டபிள் சார்பாக ஊட்டச்சத்து பெட்டகமானது வழங்கப்பட்டது.

இந்த நிகழ்ச்சியில் வரவேற்புரை திரு ராபின்சன் அவர்கள் வழங்கினார்.
அதனை தொடர்ந்து தலைமை உரை திருமதி.அனிதா தலைமை ஆசிரியர் அவர்கள் வழங்கினார்.

இந்த நிகழ்ச்சியின் மையக் கருத்தை பற்றி திருமதி கல்பனா கிராம செவிலியர் அவர்கள் ரத்த சோகையால் என்னென்ன பாதிப்புகள் ஏற்படும் என்பதும் இரும்பு சத்து குறைபாடு நாம் என்னென்ன பாதிப்புகளை சந்திக்க நேரிடும் என்பதை பற்றி குழந்தைகளுக்கு புரியும் வகையில் எடுத்துக் கூறினார்.

ரத்த சோகை உள்ள குழந்தைகள் சோர்வாகவும் மற்றும் அவர்கள் மண் கல் பேப்பர் சாம்பல் போன்றவற்றை உண்பதற்கு விருப்பப்படுவார்கள் என்றும் இரும்புச்சத்து குறைபாடு உள்ள குழந்தைகள் மிகவும் சோர்வாகவும் படிப்பில் ஆர்வம் இல்லாமலும் இருப்பார்கள் என்பதை எடுத்து கூறினார். இதனைத் தொடர்ந்து மொத்தம் 60 குழந்தைகளுக்கு ஊட்டச்சத்து வைங்கப்பட்டது.

இதில் கருப்பு உளுந்து கருப்பு கொண்டை கடலை பச்ச பயிறு முந்திரி பருப்பு மற்றும் பாதாம் பருப்பு வழங்கப்பட்டது. மாணவர்கள் இதனைப் பெற்றுக் கொண்டு எங்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருந்தது என்று கூறி சில்ட்ரன் சாரிடபிள் டிரஸ்ட் க்கு நன்றி கூறினார்கள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Posts