
புனித சிலுவை தன்னாட்சிக் கல்லூரி
திருச்சிராப்பள்ளி.
புனித சிலுவை தன்னாட்சிக் கல்லூரியின் நாட்டு நலப்பணித் திட்டமானது நேற்று 07.01.2025 ‘அரசியலமைப்பில் பெண்களின் உரிமைகள் ஒரு பயணம்’ என்ற தலைப்பில் சிறப்புக் கூட்டத்தினை ஏற்பாடு செய்தது.

இந்நிகழ்வின் சிறப்பு விருந்தினராக வழக்கறிஞர் திரு. கு. சௌந்தரராஜன். திருச்சிராப்பள்ளி. அவர்கள் பங்கேற்று பெண்களுக்குரிய திருமணம், வரதட்சணை, பெண்களுக்கு சொத்துரிமை, பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்த பல பயனுள்ள தகவல்களை வழங்கினார்.

கல்லூரியின் முதல்வர் முனைவர் அருட்சகோதரி இசபெல்லா ராஜகுமாரி அவர்களின் தலைமையில், கல்லுரியின் செயலர் முனைவர் அருட்சகோதரி சற்குணா மேரி அவர்களின் முன்னிலையில் இந்நிகழ்வானது இனிதே நடந்தேறியது.

இளங்கலை இளம் அறிவியல் முதலாம் ஆண்டு மாணவிகள் இக்கூட்டத்தில் கலந்து கொண்டு பயனடைந்தனர். கல்லூரியின் நாட்டுநலப்பணித் திட்ட ஒருங்கிணைப்பாளர் மற்றும் பொருளாதார துறை பேராசிரியர் முனைவர். பி மெர்லின் கோகிலா அவர்கள் இக்கூட்டத்தினை ஏற்பாடு செய்திருந்தார்.














