• Home
  • தமிழ்நாடு
  • “அரசு வழங்கிய விலை இல்லா புத்தகபை மற்றும் புத்தகங்கள்: குழந்தைகள் பாதுகாப்பாக பராமரிக்க  பயிற்சி”.
தமிழ்நாடு

“அரசு வழங்கிய விலை இல்லா புத்தகபை மற்றும் புத்தகங்கள்: குழந்தைகள் பாதுகாப்பாக பராமரிக்க  பயிற்சி”.

Email :185

“அரசு வழங்கிய விலை இல்லா புத்தகபை மற்றும் புத்தகங்கள்: குழந்தைகள் பாதுகாப்பாக பராமரிக்க  பயிற்சி”

கட்டுரையாக்கம்:
திரு. எஸ். சிவகுமார்,
முதல்வர் (பணி நிறைவு),
மாவட்ட ஆசிரியர் கல்வி மற்றும் பயிற்சி நிறுவனம், காஞ்சிபுரம்.
தொடர்பு எண்: 6383690730

அறிமுகம்:
அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் குழந்தைகளுக்கு விலையில்லா புத்தகப்பை மற்றும் புத்தகங்கள் வழங்கப்படுகிறது.  குழந்தைகள் பாதுகாப்பாக பராமரிக்க  பயிற்சி (09.01.2025) அளிக்கப்பட்டது.

புத்தகங்கள் மற்றும் பைகள் குழந்தைகளின் கல்வி மற்றும் ஒழுக்கம் சார்ந்த முக்கியமான பகுதியாகும்.

அவற்றை சரியான முறையில் பராமரித்தால் மட்டுமே  இதன் பயனை முழுமையாக குழந்தைகளுக்கு சென்றடையும் .

இதற்காக ஸ்ரீரங்கம் சண்முகா அரசு உதவி பெறும் நடுநிலைப்பள்ளி தலைமை ஆசிரியை
D. ஜெயபாக்கியம் மற்றும் ஆசிரியைV. ஆனந்தவல்லி ஆகியோர் குழந்தைகளுக்கு பயிற்சி அளித்தனர்.

பயிற்சி குறித்த விளக்கம்:

1. பைகளை பாதுகாப்பாக பராமரிக்கும் விதிகள்:

பைகளை அடிக்கடி சுத்தம் செய்ய வேண்டும்.

பைகளை மழையிலும் தூய்மையற்ற இடங்களிலும் வைக்கக்கூடாது.

பைகளை வேறு வேலைகளுக்காக பயன்படுத்த கூடாது.

2. புத்தகங்களை பாதுகாப்பாக வைத்துக்கொள்வது:

புத்தகங்களை மடிக்கவோ கிழிக்கவோ செய்யக்கூடாது.

புத்தகங்களுக்கு அட்டை போட்டு   (கவர்) பயன்படுத்த வேண்டும்.

புத்தகத்தில் தேவையற்ற படங்களை ஒட்டவோ கிறுக்கவோ கூடாது

3. விதிமுறைகளைக் கற்றுத்தருவது:

ஆசிரியர்கள், தினசரி வகுப்புகளில் புத்தக பைகளை எப்படி பயன்படுத்துவது என்பது குறித்து சிறிய குறிப்புகளை  வழங்கினார்கள்.

குழந்தைகளுக்கு புத்தகங்களை பகிர்ந்து பயன்படுத்தும் பொழுது கவனமாக இருக்க வேண்டும் என்று கூறினார்கள்.

4. மாணவர்களுக்கான பொறுப்புணர்வு:

புத்தகங்கள் மற்றும் பைகளை அவர்களுடைய சொந்த பொருட்களாக கருதி பாதுகாக்க  பயிற்சி அளிக்கப்பட்டது.

தேவையில்லாததை சுமக்காமல், புத்தக பையை எப்போதும் சீராக வைத்திருக்க வேண்டும் என்பதை கற்றுக்கொடுத்தனர்.

5. மாதாந்திர பரிசோதனை திட்டம்:

ஆசிரியர்கள், மாதத்திற்கு ஒரு முறை குழந்தைகளின் பைகள் மற்றும் புத்தகங்கள் சரியாக பராமரிக்கப்பட்டுள்ளதா என்பதைச் பார்ப்போம் என்று குழந்தைகளிடம் கூறினார்கள் .

பாதுகாப்பாக வைத்திருப்பவர்களுக்கு  பரிசுகள் வழங்குவோம் என்று கூறினர்.

6. குழந்தைகளுக்கு முக்கியத்துவத்தை விளக்குதல்:

விலையில்லா புத்தகப்பை மற்றும் புத்தகங்கள் கிடைத்தாலும் அவை மதிப்புமிக்கவை என்பதையும் அதை சரியாக பராமரிப்பதன் மூலம் அனைவருக்கும் உதாரணமாக இருக்க முடியும் என்பதையும் வலியுறுத்தினர்
நன்றி.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Posts