திருச்சி கலைக்காவிரி நுண்கலைக் கல்லூரியில் தீண்டாமை ஒழிப்பு உறுதிமொழி ஏற்பு நிகழ்வு நடைபெற்றது.
ஜனவரி 30 மகாத்மா காந்தியின் நினைவு நாளை முன்னிட்டு தேசிய தியாகிகள் தினம் அனுசரிக்கப்படுகிறது.

அதனையொட்டி தமிழ்நாடு அரசின் சார்பில் தீண்டாமை ஒழிப்பு உறுதிமொழி அனைத்து அரசு அலுவலகங்கள் அரசு உதவி பெறும் கல்வி நிறுவனங்கள் கல்லூரிகள் பல்கலைக்கழகங்கள் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் தீண்டாமை ஒழிப்பு உறுதிமொழி ஏற்பு நிகழ்வு நடைபெறுகிறது . கல்லூரியில் கல்லூரியின் செயலர் தந்தை அருள்பணி லூயிஸ் பிரிட்டோ தலைமையில் முதல்வர் முனைவர் ப. நடராஜன் முன்னிலையில் உறுதிமொழி ஏற்ப பு மற்றும் இரண்டு நிமிட மௌன அஞ்சலி மகாத்மா காந்திக்கு செலுத்தப்பட்டது.நாட்டு நலப்பணி திட்டத்தின் சார்பாக இந்நிகழ்வு நடைபெற்றது .


நாட்டு நலப்பணித் திட்ட அலுவலர் பேராசிரியர் கி.சதீஷ்குமார் அவர்கள் நிகழ்வை ஒருங்கிணைத்தார்.
இந்நிகழ்வில் கல்லூரியின் இருபால் மாணவர்கள் பேராசிரியர்கள் கலந்து கொண்டனர்.












