• Home
  • தமிழ்நாடு
  • திருச்சி செயின்ட் ஜோசப் கல்லூரியின் செப்பர்டு விரிவாக்கத்துறை மற்றும் இளங்கலை ஆங்கிலம் 3ஆம் ஆண்டு கணினி அறிவியல் துறை அங்கன்வாடி பாலர் பள்ளி குழு மாணவர்களால் திருச்சி மேல பாகனூர் கிராமத்தில் அங்கன்வாடி பாலர் பள்ளி நிறைவு விழா!
தமிழ்நாடு

திருச்சி செயின்ட் ஜோசப் கல்லூரியின் செப்பர்டு விரிவாக்கத்துறை மற்றும் இளங்கலை ஆங்கிலம் 3ஆம் ஆண்டு கணினி அறிவியல் துறை அங்கன்வாடி பாலர் பள்ளி குழு மாணவர்களால் திருச்சி மேல பாகனூர் கிராமத்தில் அங்கன்வாடி பாலர் பள்ளி நிறைவு விழா!

Email :153

திருச்சி செயின்ட் ஜோசப் கல்லூரியின் செப்பர்டு விரிவாக்கத்துறை மற்றும் இளங்கலை ஆங்கிலம் மூன்றாம் ஆண்டு கணினி அறிவியல் துறை அங்கன்வாடி பாலர் பள்ளி குழு (Pre School Group ) மாணவர்களால் திருச்சி மேல பாகனூர் கிராமத்தில் அங்கன்வாடி பாலர் பள்ளி நிறைவு விழா கல்லூரியின் முதல்வர் அருள்முனைவர் மரிய தாஸ் சே ச அவர்களின்  அறிவுரை படியும்  விரிவாக்கத்துறை செப்பர்டு  இயக்குநர் அருள்முனைவர் சகாயராஜ்  சே ச அவர்களின் ஆலோசனைப்படி நிகழ்ச்சி நடைபெற்றது.

இந்நிகழ்ச்சியில் கல்லூரியின் கணினி அறிவியல் துறை உதவிப் பேராசிரியர் திருமதி செரின் டோமினிக் அவர்கள்  கலந்து கொண்டு  தனது சிறப்புரையில்  சிறுகதைகள் மூலம் பாலர்களுக்கு ஒழுக்க நெறிகளை எடுத்து கூறினார்.
செப்பர்டு இளநிலை ஒருங்கிணைப்பாளர் திருமதி யசோதை அவர்கள் பசுமரத்தாணி போல் பதியும் இவ்வையதில் அவர்களுக்கு உடலை தூய்மையாக வைத்துக் கொள்வது எப்படி என்றும் அக்குழந்தைகளை

கண்ணும் கருத்துமாக பார்த்து இந்த வயதில் இருந்தே அவர்களுக்கு நல்ல பழக்கங்களை எடுத்துச் சொல்லித் தருவது அவர்களின் பெற்றோர்களின் முக்கியமான கடமையாகும் எடுத்துக்கூறினார்கள்.
இந்நிகழ்ச்சியல் வந்தவர்களை செல்வன் சந்தோஷ் வரவேற்று தொகுத்து வழங்கினார்.

முடிவில் செல்வன் ஜெரால்டு நன்றி கூறினார்; இந்நிகழ்ச்சியில் பாலர் பள்ளி மாணவர்களும்; மற்றும் அவர்களின் பெற்றோர்களும் கலந்து கொண்டார்கள் மாணவர்களை ஊக்குவிக்கும் விதமாக அவர்களுக்கு பரிசுப் பொருட்களும் வழங்கப்பட்டன.

இந்நிகழ்ச்சியை  ஆங்கிலம் மூன்றாம் ஆண்டு கணினி துறை அங்கன்வாடி பாலர் பள்ளி குழு (Pre School Group ) மாணவ தலைவர். சந்தோஷ் மற்றும் குழு உறுப்பினர்களான  ஜெரால்டு, ஆசேர், தாமஸ், சார்லஸ், நிசான். ஆகியோர் இனிதே ஒருங்கிணைத்து நடத்தினர். அனைவருக்கும் இனிப்பு வழங்க விழா இனிதே நிறைவுற்றது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Posts