திருச்சி கண்டோன்மென்ட் பகுதியில் அமைந்துள்ள St. சென்டன்ஸ் பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் (புனித அன்னாள் பெண்கள் மேல்நிலைப்பள்ளி) “போதை பழக்கங்களில் இருந்து இளைஞர்களை மீட்டெடுப்போம்” என்ற தலைப்பில் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடத்தப்பட்டது. இந்நிகழ்ச்சியில் பள்ளியின் தாளாளர் மற்றும் தலைமை ஆசிரியர் விக்டோரியா தலைமை வகித்தார் ஆசிரியர் ஷீலா நிகழ்ச்சியை வழிநடத்தினார்.

இந்நிகழ்வில் சிறப்பு விருந்தினராக ஆலோசனை வழங்க ஆத்மா மனநல மையத்தின் சமூக மனநல ஆலோசகர் திரு கரன் லூயிஸ் அவர்கள் சிறப்புரை வழங்கி மாணவிகளின் சந்தேகங்களுக்கு பதில் அளித்தார்.

இந்நிகழ்வில் 1200க்கும் மேற்பட்டோர் இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பயனடைந்தனர்.














