அரவக்குறிச்சி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி மாணவர்கள் சதுரங்கப்போட்டியில் மாவட்டப்போட்டிக்குத் தேர்வு.அரவக்குறிச்சி குறுவட்ட மையப் போட்டிகள் தற்பொழுது நடைபெற்று வருகிறது. சதுரங்கத்திற்கு அரவக்குறிச்சி மற்றும் பரமத்தி வட்டாரத்திற்கான இணைந்த போட்டி சின்னதாராபுரத்தில் நடைபெற்றது.அதில் 14 வயதுக்குட்பட்ட போட்டியில் அனைத்து சுற்றுகளிலும் வெற்றி பெற்று பூவிதா முதன்மை இடத்தை அடைந்து மாவட்டப் போட்டிக்கு தேர்வானார்.

மேலும் 11 வயதுக்குட்பட்டோர் போட்டியில் மதனா இரண்டாம் இடம் பெற்று இவரும் மாவட்டப்போட்டிக்கு தேர்வுபெற்றுள்ளார். மேலும் கூடைப் பந்தாட்டத்தில் ஆண்கள் அணியும், பெண்கள் அணியும் குறுவட்டமைய அளவில் இரண்டாம் இடம் பெற்றது.மேலும் வளையப்பந்தாட்டத்தில் இரட்டையர் பிரிவில் கிருஷ்ணவேணி,யாழினி ரன்னர் பெற்றனர்.வெற்றி பெற்ற மாணவர்களையும் பயிற்சி அளித்த உடற்கல்வி ஆசிரியர் சங்கர்,பட்டதாரி ஆசிரியர் சகாய வில்சன் மேலும் ஊக்குவித்த பட்டதாரி ஆசிரியர் ஷகிலா பானு மற்றும் ரூபா ஆகியோருக்கு வட்டாரக் கல்வி அலுவலர்கள் சகுந்தலா,தர்மராஜ் மற்றும் தலைமையாசிரியர் சாகுல் அமீது பள்ளி மேலாண்மைக் குழுவினர் பாராட்டினார்கள்.














