குற்றவியல் வழக்கறிஞர் சங்கச் செயலாளர் P. V. வெங்கட் அவர்கள் அறிக்கையில், மாபெரும் ரத்ததான முகாமை மாண்புமிகு முதன்மை மாவட்ட நீதிபதி M. கிறிஸ்டோபர் அவர்கள் துவக்கி வைக்கிறார். திருச்சி குற்றவியல் வழக்கறிஞர் சங்கம், துளசி பார்மசி, மகாத்மா காந்தி நினைவு அரசு மருத்துவமனை இணைந்து நடத்தும் மாபெரும் ரத்ததான முகாம். உலக ரத்ததான கொடையாளர் தினத்தை முன்னிட்டு வருகிற ஜூலை 17 வியாழக்கிழமை காலை 10 மணி முதல் மதியம் 1 மணி வரை புதிய நீதிமன்ற கட்டிடம் நாலாவது மாடியில் இரத்ததான முகாம் நடைபெற உள்ளது அது சமயம் வழக்கறிஞர்கள் நீதிமன்ற ஊழியர்கள் கலந்துகொண்டு ரத்த தானம் கொடுத்து நிகழ்வினை சிறப்பிக்குமாறு அன்போடு கேட்டுக்கொள்கிறோம் . கொடையாளர்கள் அனைவருக்கும் அங்கேயே அரசு மருத்துவமனை வழங்கும் சான்றிதழ் உடனே வழங்கப்படும்.மேலும் நாம் வழங்கும் ரத்த தானம் ஆனது அரசு மருத்துவமனையில் தற்போது மகப்பேறு பிரிவில் தேவைப்படும் மகளிர்களுக்கு நம் தானம் உதவும் என்பதை அன்போடு தெரிவித்துக் கொள்கிறோம்.














