நேற்று 05.08.25 திருச்சி காவேரி மகளிர் கல்லூரியின் சமூகப்பணித்துறை , Soc Sead குடும்ப ஆலோசனை மையம் மற்றும் தின சேவை அறக்கட்டளை உடன் இணைந்து “நல்வாழ்வை நோக்கி நகர்தல் – புத்திசாலியாக இருங்கள், பாதுகாப்பாக இருங்கள், எச்சரிக்கையாக இருங்கள்! என்று விழிப்புணர்வு நிகழ்ச்சியை சேவா சங்கம் பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் மாணவிகளுக்கு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடத்தப்பட்டது.
இந்நிகழ்ச்சியின் சிறப்பு விருந்தினராக திரு.சி.சசி,(அவர்கள்) soc sead குடும்ப ஆலோசனை மையம், திருச்சி, மற்றும் திருமதி. Dr.R. அனிதா(அவர்கள்) துணைப் பேராசிரியர், சமூகப் பணி முதுகலை மற்றும் ஆராய்ச்சித்துறை, காவேரி மகளிர் கல்லூரி (அ) ,முன்னாள் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர், திருச்சி- புதுக்கோட்டை, மற்றும்
திரு.K.சிவபிரகாசம்(அவர்கள்) தின சேவை அறக்கட்டளை (நிறுவனர்/தலைவர்), திருச்சி ஆகியோர் வருகை தந்தனர். தின சேவை அறக்கட்டளையின் அறங்காவலர் திருமதி.பகவதி (அவர்கள்) மற்றும் தின சேவை அறக்கட்டளையின் தன்னார்வலர் திருமதி புவனேஸ்வரி (அவர்கள்) மரக்கன்றுகள் வழங்கியும் சிறப்பித்தார்கள்.

வாழ்த்துரை திருமதி .ஏ.எல். நாகம்மை(அவர்கள்) தலைமை ஆசிரியர், சேவா சங்கம் பெண்கள் மேல்நிலைப்பள்ளி, திருச்சி.
திரு.சி.சசி(அவர்கள்). மற்றும் திருமதி.Dr. R.அனிதா(அவர்கள்) அவர்கள் மாணவிகளிடம் நல்வாழ்வை நோக்கி நகர்தல் – புத்திசாலியாகவும், பாதுகாப்பாகவும், எச்சரிக்கையாகவும் எப்படி இருக்க வேண்டும் என்ற தலைப்பில் மாணவிகளுக்கு விழிப்புணர்வு வழங்கினார்கள். ஒருங்கிணைப்பாளரான திருமதி.O. ஆயிஷா மஞ்சு(அவர்கள்) உதவி பேராசிரியர், முதுகலை சமூகப் பணி துறை நிகழ்ச்சிக்கு வழிக் காட்டினார்கள்.

இன்றைய நிகழ்ச்சியை சிறப்பான முறையில் தொகுத்து வழங்கிய இரண்டாம் ஆண்டு முதுகலை சமூகப் பணி துறை மாணவி.K.வேதா (அவர்கள்), மாணவி.A. விஷ்ணு பிரியா(அவர்கள்), பிளாரன்ஸ் ஜெர்ரி(அவர்கள்), முதலாம் ஆண்டு மாணவி P.பரிமளா (அவர்கள்) முழு சமூக அக்கறையுடன் ஏற்பாடு செய்திருந்தனர்.
இந்நிகழ்வில் சேவா சங்கம் பெண்கள் மேல்நிலைப்பள்ளி மாணவிகள் 60 க்கும் மேற்பட்டவர்கள் இன்றைய நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பயனடைந்தனர்.
இந்நிகழ்வினை சிறப்பாக நடைபெற உறுதுணையாக இருந்த சேவா சங்கம் பள்ளி நிர்வாகத்திற்கும் இதற்கு உதவியாக இருந்த சமூக சேவகர்களுக்கும் எங்களின் நெஞ்சார்ந்த நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறோம்.














