• Home
  • தமிழ்நாடு
  • தந்தை சூ.லூயிஸ் பிரிட்டோ எழுதி வெளியிட்ட சுற்றுச்சூழல் விழிப்புணர்வுப் பாடல் குறுவட்டு வெளியீட்டு விழா நடைபெற்றது.
தமிழ்நாடு

தந்தை சூ.லூயிஸ் பிரிட்டோ எழுதி வெளியிட்ட சுற்றுச்சூழல் விழிப்புணர்வுப் பாடல் குறுவட்டு வெளியீட்டு விழா நடைபெற்றது.

Email :77

கலைக்காவிரி நுண்கலைக் கல்லூரியில் தண்ணீர் சுற்றுச் சூழல் மாணவர் மன்றம்  சார்பாக கல்லூரியின் செயலர் தந்தை சூ.லூயிஸ் பிரிட்டோ எழுதி வெளியிட்ட சுற்றுச்சூழல் விழிப்புணர்வுப் பாடல் குறுவட்டு வெளியீட்டு விழா நடைபெற்றது.

இந்நிகழ்வில் சிறப்பு விருந்தினராக மாநகராட்சி மேயர் திரு.மு. அன்பழகன் கலந்து கொண்டு இசை குறுவட்டினை வெளியிட்டார். கல்லூரியின் மேனாள் செயலர் அருள்பணி. ட. அந்துவான் அடிகள் மற்றும் செயலர் அருள்பணி சூ. லூயிஸ் பிரிட்டோ, முதல்வர் முனைவர் உமா மகேஸ்வரி கலந்து கொண்டனர். இந்நிகழ்வில் தண்ணீர் அமைப்பின் சார்பாக “துணிப்பை எடுப்போம், சூழல் காப்போம்” எனும் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. தண்ணீர் அமைப்பின் செயல் தலைவர் திரு.கே.சி நீலமேகம் மற்றும் செயலாளர் பேராசிரியர் கி.சதீஷ் குமார் பங்கேற்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Posts