• Home
  • தமிழ்நாடு
  • திருச்சிராப்பள்ளி மாவட்டத்தில் பெண் கல்வியைப் பாரம்பரிய பெருமையுடன் பறைசாற்றும் சீதாலக்ஷ்மி ராமஸ்வாமி கல்லூரியின் 75 ஆண்டு நிறைவு பவளவிழா கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக இந்திய திருநாட்டின் 77 ஆவது குடியரசு தின விழா வெகு சிறப்பாகக் கொண்டாடப்பட்டது.
தமிழ்நாடு

திருச்சிராப்பள்ளி மாவட்டத்தில் பெண் கல்வியைப் பாரம்பரிய பெருமையுடன் பறைசாற்றும் சீதாலக்ஷ்மி ராமஸ்வாமி கல்லூரியின் 75 ஆண்டு நிறைவு பவளவிழா கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக இந்திய திருநாட்டின் 77 ஆவது குடியரசு தின விழா வெகு சிறப்பாகக் கொண்டாடப்பட்டது.

Email :122

திருச்சிராப்பள்ளி மாவட்டத்தில் பெண் கல்வியைப் பாரம்பரிய பெருமையுடன் பறைசாற்றும் சீதாலக்ஷ்மி ராமஸ்வாமி கல்லூரியின் 75 ஆண்டு நிறைவு பவளவிழா கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக இந்திய திருநாட்டின் 77 ஆவது குடியரசு தின விழா வெகு சிறப்பாகக் கொண்டாடப்பட்டது. திருச்சிராப்பள்ளியின் பாரம்பரிய பெருமை வாய்ந்த கே.பி.செல்லம் செட்டியார் நகைக்கடை உரிமையாளர் உயர்திரு பத்ரிநாத் அவர்கள் வழங்கிய 77 அடி நீளம் உள்ள இந்திய திருநாட்டின் மூவர்ணக் கொடி,  முதலாம் நூற்றாண்டு  கரிகாலனால்  உலகப் பொறியியல் தொழில்நுட்ப திறனுக்கு சவால் விடும் வகையில் கட்டப்பட்ட கல்லணை பாலத்தில் 75 மாணவர்கள் கூடி காட்சிப்படுத்தினர்.

சீதாலக்ஷ்மி ராமஸ்வாமி கல்லூரி முதல்வர் முனைவர் எம்.வி.அல்லி, சுயநிதிப்பிரிவு பொறுப்பாளர் எஸ்.சாந்தி,  அகத்தர நிர்ணயக் குழு ஒருங்கிணைப்பாளர் ஏ.எஸ்.மகேஸ்வரி, பேராசிரியர்கள், தேசிய மாணவர் படை மாணவர்கள், செஞ்சிலுவை சங்க மாணவர்கள், எக்ஸ்னோரா மாணவர்கள், விளையாட்டுத்துறை மாணவர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர். அயல் தேசத்து மக்களும் இந்நிகழ்வில் கலந்து கொண்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Posts