• Home
  • தமிழ்நாடு
  • ஸ்ரீமத் ஆண்டவன் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் ‘மூளை முடக்குவாதம்’ குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி!
தமிழ்நாடு

ஸ்ரீமத் ஆண்டவன் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் ‘மூளை முடக்குவாதம்’ குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி!

Email :139

ஸ்ரீமத் ஆண்டவன் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் ‘மூளை முடக்குவாதம்’ குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி!
ஸ்ரீமத் ஆண்டவன் கலை மற்றும் அறிவியல் கல்லூரி சமூகப்பணித்துறை சார்பில்  (04.03.2026)  இன்று  ‘மூளை முடக்குவாதம்’ குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.  கல்லூரி முதல்வர் முனைவா் ம.பிச்சைமணி அவர்கள் தலைமையுரை ஆற்றினார்.  கலைப்புல முதன்மையார் முனைவா் ச. லட்சுமி  அவர்கள் வாழ்த்துரை வழங்கினார்.  .

இந்நிகழ்வில் திருச்சிராப்பள்ளி ஸ்பாஸ்டிக் அமைப்பின்   முதுநிலை சிறப்பு கல்வியாளா் திருமதி E. ஞானசெல்வி அவர்கள் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு உரையாற்றினார். அதில்  மூளை முடக்குவாதம் என்றால் என்ன?, அவை வருவதற்கான காரணங்கள், அறிகுறிகள் பற்றியும், சிகிச்சை மற்றும் மறுவாழ்வுக்கான வழிமுறைகள் குறித்தும் விரிவாக விளக்கமளித்து மாணவர்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தினார்.  முன்னதாக வரவேற்புரை மற்றும் நன்றியுரையை சமூகப்பணித்துறை முதலாமாண்டு மாணவி சோபியா கோவிந்தசாமி  வழங்கினார்.  இதில்  நாட்டு நலப்பணி திட்ட தன்னர்வல மாணவ-மாணவிகள் 86 போ் கலந்து கொண்டு  சிறப்பு குழந்தைகளை வளா்ப்பதில் உண்டான சமூக பொறுப்பு மற்றும்  வளா்க்கும் விதங்களை பற்றி கேட்டுப்  பயனடைந்தனா். இந்நிகழ்விற்கான ஏற்பாடுகளை
சமூகப்பணித்துறைத் தலைவர் முனைவர் ஆ. அருண்பிரகாஷ் அவர்களின் வழிகாட்டுதலின் கீழ்  பேராசிரியர்கள் மற்றும் மாணவர்கள்  செய்திருந்தனா்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Posts