• Home
  • தமிழ்நாடு
  • கிருஸ்து ராஜ் கல்லூரி சமூகப் பணித்துறை மற்றும் காஜாமலை மகளிர் மன்றம் இணைந்து நடத்திய போதை மற்றும் அலைபேசி அடிமைத்தனம் பற்றிய விழிப்புணர்வு நிகழ்ச்சி!
தமிழ்நாடு

கிருஸ்து ராஜ் கல்லூரி சமூகப் பணித்துறை மற்றும் காஜாமலை மகளிர் மன்றம் இணைந்து நடத்திய போதை மற்றும் அலைபேசி அடிமைத்தனம் பற்றிய விழிப்புணர்வு நிகழ்ச்சி!

Email :64

கிருஸ்து ராஜ் கல்லூரி சமூகப் பணித்துறை மற்றும் காஜாமலை மகளிர் மன்றம் இணைந்து நடத்திய போதை மற்றும் அலைபேசி அடிமைத்தனம் பற்றிய  விழிப்புணர்வு நிகழ்ச்சி 28.02.2026  சனிக்கிழமை

அன்று காலை 11 மணி அளவில் திருச்சி தென்னூர் பகுதியில் உள்ள சவேரியார் கோவில் தெருவில் உள்ள தேவாலயத்தில் நிகழ்ச்சி நடைபெற்றது.

தமிழ்த்தாய் வாழ்த்துடன்  ஆரம்பமான  இந்நிகழ்ச்சியில் காஜாமலை மகளிர் மன்றத்தின் திட்ட ஒருங்கிணைப்பாளர் திரு. M. பாரதிமோகன் அவர்கள் தலைமையுரை வழங்கினார். 

தொடர்ந்து திருச்சி தூய வளனார்  கல்லூரியின் முன்னாள் ஆங்கிலத்துறைத் தலைவர் G. ரவீந்திரன் அவர்கள் சிறப்புரையாற்றினார்.

தொடர்ந்து கிருஸ்து ராஜ் கல்லூரியின் சமூகப் பணித்துறைத் தலைவி பேரா. S. இசபெல்லா வாழ்த்துரை வழங்கினார்.   முன்னதாக காஜாமலை மகளிர் மன்றத்தின் மனநல ஆலோசகர் திருமதி A. சாயின் மாலிகா  முன்னிலை உரை வழங்கினார். மேலும் இந்நிகழ்ச்சியை சிறப்பிக்கும் வகையில் சமூகப் பணித்துறை முதலாம் ஆண்டு மாணவர் L. பாபு விழிப்புணர்வு பாடலை பாடினார். அந்தப் பகுதியின் சிறுவர் சிறுமியர், வாலிபர்கள் மற்றும் பொதுமக்கள் யாவரும் கலந்து கொண்டு பயன்பெற்றனர்.

கலை நிகழ்ச்சிகளும் இடம் பெற்றிருந்தது. இந்நிகழ்ச்சியை கிருஸ்து ராஜ் கல்லூரியின் சமூகப் பணித்துறை முதலாம் ஆண்டு மாணவர் திரு. L. பாபு ஒருங்கிணைத் திருந்தார். நாட்டுப் பண்  உடன் நிகழ்ச்சி இனிதே நிறைவுற்றது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Posts