• Home
  • தமிழ்நாடு
  • அறிவியல் தினத்தை முன்னிட்டு செயின்ட் ஜோசப் கல்லூரியின் விரிவாக்கத் துறை செப்பர்டு சார்பாக  இனாம்குளத்தூர் ஊராட்சியில் உள்ள கீழப்பட்டி கிராமத்தில்    மூலிகை விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைப்பெற்றது.
தமிழ்நாடு

அறிவியல் தினத்தை முன்னிட்டு செயின்ட் ஜோசப் கல்லூரியின் விரிவாக்கத் துறை செப்பர்டு சார்பாக  இனாம்குளத்தூர் ஊராட்சியில் உள்ள கீழப்பட்டி கிராமத்தில்    மூலிகை விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைப்பெற்றது.

Email :29

அறிவியல் தினத்தை முன்னிட்டு செயின்ட் ஜோசப் கல்லூரியின் விரிவாக்கத் துறை செப்பர்டு சார்பாக  இனாம்குளத்தூர் ஊராட்சியில் உள்ள கீழப்பட்டி கிராமத்தில்    மூலிகை விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைப்பெற்றது.

இந்நிகழ்ச்சி விரிவாக்கத்துறையின் இயக்குநர் அருள் முனைவர் சகாயராஜ் சே ச அவர்களின் தலைமையில்  இனாம் குளத்தூர் முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர்  திருமதி வெள்ளையம்மாள் பழனிச்சாமி மற்றும் கிராமத் தலைவர் திரு சிவமணி ஆகியோர் முன்னிலையில் நடைபெற்றது.

கல்லூரியின் தாவரவியல் துறையின் பேராசிரியர் முனைவர் பிரான்சிஸ் சத்தியசீலன்  தனது சிறப்புரையில் மூலிகைகளின் முக்கியத்துவம் நம் நாட்டினுடைய பாரம்பரிய மருத்துவமான மூலிகை மருத்துவத்தையும் பேணி பாதுகாக்க வேண்டும் மேலும் மூலிகைச் செடிகளை அனைவரும் வளர்த்து மூலிகை மருந்தினை பயன்பாட்டுக்கு கொண்டு வந்து அனைவரும் பயன் படுத்த வேண்டுமென அவர் வலியுறுத்தினார்.

முன்னதாக செப்பர்டு விரிவாக்கத்துறையின் முதுநிலை ஒருங்கிணைப்பாளர்  திரு லெனின்  தமது தொடக்க  உரையில் நம் கல்லூரி மூலிகை மருத்துவ பயிற்சியினை 1994 இல் இருந்து நாகமங்கலம் மூலிகைப் பண்ணையில் வழங்கி வருகிறது என்றும் மக்களின் அடிப்படைத் தேவைகளுக்கான மூலிகைச் செடிகளை நாற்றுகளை வாங்கி பயன்படுத்தலாம் என்றும் மூலிகை மருத்துவ பயிற்சி  இயற்கை சார்ந்த விவசாய பயிற்சி மற்றும் மதிப்பு கூட்டு பயிற்சி தொழில் முனைவோர் பயிற்சி என பல்வேறு பயிற்சிகளை  வழங்கிக் கொண்டிருக்கிறது  மக்கள் அதனை பயன்படுத்திக் கொண்டு பொருளாதாரத்தில் முன்னேறுவதற்கும் நம்முடைய உடல் நலம் பேணி பாதுகாப்பதற்கு நம் நாட்டின் பாரம்பரிய மருத்துவமான மூலிகை மருத்துவத்தை பின்பற்றி பயன்படுத்த வேண்டும் என்று கூறினார்.

தாவரவியல் துறை மாணவி வாணி ஸ்ரீ வந்தவர்களை வரவேற்றார் முடிவில் மாணவி   அஸ்வின் கிறிஸ்டியா நன்றி கூறினார்   இவ் அறிவியல் தினத்தில்  மூலிகை மருத்துவ  விழிப்புணர்வு நிகழ்ச்சியில் 40க்கும் மேற்பட்ட குழந்தைகளும் முப்பதுக்கு மேற்பட்ட மக்களும் கலந்துகொண்டு சிறப்பித்தனர்

மூலிகை இனம் கண்டறிதல் மூலிகையின் மருத்துவ பயன்கள் கொண்ட விளக்கப்பட அட்டைகள் மூலிகை மருந்துகள் மற்றும் மருத்துவ பயன்கள் பற்றி இந்நிகழ்ச்சியில் விளக்கப்பட்டன நவதானியங்கள் கொண்டு தயாரிக்கப்பட்ட மூலிகை பானம்  மூலிகை செடிகள் அனைவருக்கும் கொடுக்கப்பட்டது  மூன்றாமாண்டு தாவரவியல் துறை மாணாக்கர்கள் இந்நிகழ்ச்சியை ஏற்பாடு செய்திருந்தார்கள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Posts