• Home
  • தமிழ்நாடு
  • செயின்ட் ஜோசப் கல்லூரித் தமிழாய்வுத்துறையில் தொழில் முனைவுக் கருத்தரங்கம்!
தமிழ்நாடு

செயின்ட் ஜோசப் கல்லூரித் தமிழாய்வுத்துறையில் தொழில் முனைவுக் கருத்தரங்கம்!

Email :40

செயின்ட் ஜோசப் கல்லூரித் தமிழாய்வுத்துறையில் தொழில் முனைவுக் கருத்தரங்கம்!

செயின்ட் ஜோசப் கல்லூரித் தமிழாய்வுத்துறையில் தொழில் முனைவுக் கருத்தரங்கம்  நடைபெற்றது.  கருத்தரங்க ஒருங்கிணைப்பாளரும் பணிமுறை இரண்டின் ஒருங்கிணைப்பாளருமாகிய பேரா. சி. பாக்கிய செல்வ ரதி வரவேற்புரை ஆற்றினார். உயிர் அறிவியல் புல முதன்மையர் முனைவர் த. பிரான்சிஸ் சேவியர் அவர்கள் தலைமை வகித்தார். தலைமை உரையில் கூறியதாவது இந்தியா பொருளாதார வளர்ச்சி அடைந்து வருகின்ற நாடு. உலக அளவில் பொருளாதார வளர்ச்சியில் ஐந்தாம் இடத்தில் இருந்து நான்காம் இடம்  வருவதற்கு ஸ்டார்ட் அப்பே காரணம். ஒவ்வொரு மாதமும் 140 க்கு மேற்பட்ட வணிக நிறுவனங்கள் தொடங்கப்பட்டு வருகின்றன.  ஸ்டார்ட் அப் இந்தியா போன்ற பல திட்டங்கள் உள்ளன. இத்திட்டங்களை முழுமையாக பயன்படுத்த வேண்டும்.  தன் தலையில் விழுந்த ஆப்பிளை சாப்பிடாமல் ஏன் விழுந்தது? எதற்காக விழுந்தது ? அ்என சிந்தித்ததால் தாமஸ் ஆல்வா எடிசனால் புவி ஈர்ப்பு விசையைக் கண்டுபிடிக்க முடிந்தது புதியவற்றை கற்றுக் கொள்ளுங்கள். புதிய சிந்தனைகள் வழியாக புதியவற்றை உருவாக்கி தொழில் முனைவோராக மாறுங்கள். வேலை தேடுவோராக அல்லாமல் வேலை வழங்குபவராக மாறுங்கள் என்று கூறினார். தமிழாய்த்துறைத் தலைவர் முனைவர் ஆ. ஜோசப் சகாயராஜ் அவர்கள் வாழ்த்துரை வழங்கினார். 

மிஸ்டர் மொமெண்ட் கிப்ட்ஸ் என்ற வணிக நிறுவனத்தை இன்ஸ்டாகிராம் வழியாக நடத்தி வருபவரும் தூய வளனார் கல்லூரியின் வணிகவியல் மாணவருமான ரா. சிவகிரி அவர்கள் பயிற்சியாளராக வருகைதந்து மாணவர்களுக்குப் பரிசுப் பொருட்களை உருவாக்கும் முறையினைச் செய்முறைப் பயிற்சியாக வழங்கினார். அவரின் வழிகாட்டலின்படி மாணவர்களும் பரிசு பொருட்களைத் தயாரித்தனர்.

இந்தக் கருத்தரங்கில் இளங்கலைத் தமிழ் பயிலும் 25 மாணவர்கள் பங்கேற்றுப் பயிற்சி பெற்றனர். நிறைவில் இளங்கலை தமிழ் மூன்றாம் ஆண்டு பயிலும் மாணவி ஏ. அனிஷா சிரில் நன்றியுரை ஆற்றினார். இளங்கலை தமிழ் மூன்றாம் ஆண்டு பயிலும் மாணவி வே. கோபிகா நெறியாளுகை செய்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Posts