• Home
  • தமிழ்நாடு
  • செயின்ட் ஜோசப் கல்லூரியில் பொருளாதாரத்துறை நடத்திய பன்னாட்டுக் கருத்தரங்கம்!
தமிழ்நாடு

செயின்ட் ஜோசப் கல்லூரியில் பொருளாதாரத்துறை நடத்திய பன்னாட்டுக் கருத்தரங்கம்!

Email :55

செயின்ட் ஜோசப் கல்லூரியில் பொருளாதாரத்துறை நடத்திய பன்னாட்டுக் கருத்தரங்கம்!

செயின்ட் ஜோசப் கல்லூரி யூபிலி அரங்கில் உலக பொருளாதாரத்தில் வர்த்தகத்தின் மூலம் நாடுகளை இணைத்தல் என்னும் பொருண்மையில்
பொருளாதாரத்துறை சார்பில் பன்னாட்டுக் கருத்தரங்கம் நடைபெற்றது.  கல்லூரி அதிபர் அருள்முனைவர் பவுல்ராஜ் மைக்கேல் சே‌.ச. வாழ்த்துரை வழங்கி தொடங்கி வைத்தார்.

செய்லோன் வொர்க்கர்ஸ் காங்கிரஸ் தலைவர் திரு. செந்தில் தொண்டமான் தொடக்கவுரையாற்றினார்.  தற்போதைய நிலைகுலைந்த புவியியல் அரசியல் முன்னேற்றங்களின் சூழலில் இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி பாராட்டத்தக்கது என தமது உரையில் குறிப்பிட்டார்.

முனைவர் நிகோலெட்டா அகாட்ரினெய், மூத்த தலைமை விஞ்ஞானி, ஸ்விட்சர்லாந்து) முனைவர் ரோஹித் கண்டா (உதவி பேராசிரியர், மேவார் பல்கலைக்கழகம், ராஜஸ்தான்)  முனைவர் ஜி. ஞானச்சந்திரன், (ஈஸ்டர்ன் பல்கலைக்கழகம், இலங்கை) முனைவர் ருக்ஸானா பானு, (மஸ்கட் கல்லூரி, ஓமான் சுல்தானகம்)  முனைவர் எஸ். தீனதயாளன் (பேராசிரியர்,மதுரை கல்லூரி) மற்றும் திரு நெய்ம்யு ஹடுன் (கர்நாடகா)
ஆகியோர் கருத்துரையாளர்களாகப் பங்கேற்று கொண்டு டிஜிட்டல் வர்த்தகம், நிலைத்தன்மை, உலக வெப்பமயமாதல், காலநிலை மாற்றம் மற்றும் சர்வதேச வர்த்தக செயல்பாடுகள் உள்ளிட்ட பொருண்மைகளில் தங்களின் நிபுணத்துவத்தைப் பகிர்ந்து கொண்டனர்.

பல்வேறு கல்வி நிறுவனங்களைச் சேர்ந்த பங்கேற்பாளர்கள் நேரலை மற்றும் முடக்கலை முறைகளில் ஆய்வுக் கட்டுரைகளை சமர்ப்பித்து, நிபுணர்களிடமிருந்து கருத்துகளையும் பரிந்துரைகளையும் பெற்றனர்.

‘செயற்கை நுண்ணறிவு மற்றும் வேளாண்மை’ என்ற பொருண்மையில்    காந்திகிராம் கிராமிய நிறுவன பொருளாதாரத் துறைத்தலைவர் முனைவர் டாக்டர் டி. மணிகண்டன் நிறைவுரையாற்றினார்.

துறைத்தலைவர் முனைவர் சுவக்கின் அவர்கள் தலைமையிலான செயின்ட் ஜோசப் கல்லூரி பொருளாதாரத்துறைப் பேராசிரியர்கள் கருத்தரங்க ஏற்பாடுகளைச் சிறப்பாக செய்திருந்தனர்.

கல்லூரி, பல்கலைக்கழக பேராசிரியர்கள், முனைவர் பட்ட ஆய்வாளர்கள், இளநிலை முதுநிலை மாணவர்கள் உள்பட 380 பேர் கருத்தரங்கில் பங்கேற்று பயனடைந்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Posts