உன்னத் பாரத் அபியான் (UBA) திட்டத்தின் கீழ் தமிழக மண்டல ஒருங்கிணைப்பு மையமான கோயம்புத்தூர் தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் சார்பில் உயர்கல்வி நிறுவனங்களுக்கான ஒரு நாள் புத்தாக்கப் பயிற்சி பட்டறை திருச்சி செயின்ட் ஜோசப் தன்னாட்சிக் கல்லூரியில் நடைபெற்றது.
இப்பயிற்சியானது உன்னத் பாரத் அபியான் திட்டத்தை நிறுவன அளவிலும் கிராம அளவிலும் வலுப்படுத்துவதற்கான உத்திகள் வழங்குவதை நோக்கமாகக் கொண்டு நடத்தப்பெற்றது. சிறந்த செயல்பாடுகளைப் பகிர்ந்து கொள்ளுதல் கல்வி நிறுவனங்களுக்கு இடையேயான ஒத்துழைப்பை மேம்படுத்துதல் மற்றும் ஊரக வளர்ச்சியில் மாணவர்களின் பங்களிப்பை உறுதி செய்தல் ஆகியவற்றை மையமாகக் கொண்டு இப்பயிற்சி நடைபெற்றது.

செயின்ட் ஜோசப் கல்லூரி கல்வி நிறுவனங்களின் அதிபர் அருள்முனைவர் பவுல்ராஜ் மைக்கேல் சே ச நிகழ்ச்சியை ஆசீர்வதித்துத் தொடங்கி வைத்த அவர் கல்லூரி மாணவர்களின் சமூக ஈடுபாடு மற்றும் கிராமப்புற மேம்பாட்டின் அவசியத்தை வலியுறுத்தினார்.
உன்னத் பாரத் அபியான் திட்டத்தின் மண்டல ஒருங்கிணைப்பாளரும் தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் வேளாண் வணிக மேம்பாட்டு இயக்குநகரத்தின் இயக்குநர் முனைவர் சோமசுந்தரம் சிறப்புரையாற்றினார். அவர் தனது உரையில் நிலையான கிராமப்புற வளர்ச்சிக்கான புதிய பாதைகள் குறித்து விளக்கமளித்தார்.

மேலும் வேளாண்மையில் தொடக்க நிறுவனங்களை ஆதரிப்பதும் பல்கலைக்கழகத்தால் உருவாக்கப்பட்ட தொழில்நுட்பங்களை வணிகமயமாக்குவதும் வேளாண்மை மற்றும் அதனுடன் தொடர்புடைய நடவடிக்கைகளில் ஆர்வமுள்ள வேளாண் வணிக நிறுவனங்கள் மற்றும் தொழில்முனைவோரின் அனைத்து வணிகத் தேவைகளுக்கும் ஒரே இடத்தில் தீர்வாக சேவை செய்து வருவது குறித்து பேசினார்.
இத்திட்டத்தின் மண்டல இணை ஒருங்கிணைப்பாளரும் தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் மனிதவள மேம்பாட்டு துறையின் பேராசிரியருமான முனைவர் முரளிதரன் முனைவர் வர்மா ஆகியோர் விளக்கவுரையாற்றினார் அவர் தனது உரையில் 2026-27-ஆம் ஆண்டிற்கான உன்னத் பாரத் அபியான் திட்ட வரைபடத்தை விளக்கி பங்கேற்பு நிறுவனங்கள் பின்பற்ற வேண்டிய காலக்கெடு மற்றும் உத்திகளைப் பகிர்ந்து கொண்டார்.

செயின்ட் ஜோசப் கல்லூரிசெப்பர்டு விரிவாக்கத்துறையின் இயக்குனர் அருள்முனைவர் சகாயராஜ் சே ச கலந்து கொண்டு பேசினார். உன்னத் பாரத் அபியான் திட்டத்தின் கீழ் கிராமசபை ஒப்புதலுடன் 2017 முதல் 2026 வரை கல்லூரி மாணவர்களும் கிராம மக்களும் இணைந்து உருவாக்கிய திட்டங்களை விளக்கினார். குறிப்பாக நிலத்தடி நீர் செறிவூட்டும் உறிஞ்சு குழிகள் அமைத்தல் குறைந்த மின் திறன் கொண்ட சிறிய ரக காற்றாலைகள் முருங்கை சார்ந்த மதிப்பு கூட்டப்பட்ட பொருட்கள் தயாரிப்பு செய்தல் மற்றும் மூலிகை மருந்து வகைகள் தயாரித்தல் போன்ற திட்டங்களை விளக்கப்பட காட்சிகளுடன் கூறினார்.
தமிழ்நாடு முழுவதிலும் உள்ள 130 உயர்கல்வி நிறுவனங்களிலிருந்து உன்னத் பாரத் அபியான் திட்டத்தின் பங்கேற்பு நிறுவனங்ளின் ஒருங்கிணைப்பாளர்கள் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர்கள்.

இதில் கலந்து கொண்டு அவர்கள் தங்கள் மாவட்ட தேர்ந்தெடுக்கப் பெற்ற கிராமங்களில் செயல்படுத்திய திட்டங்களின் அனுபவங்களைப் பகிர்ந்து கொண்டனர்.
நிகழ்ச்சியின் நிறைவாக செப்பர்டு விரிவாக்கத்துறையின் முதுநிலை ஒருங்கிணைப்பாளர் திரு லெனின் தலைமையில் பங்கேற்பாளர்கள் களப்பயணம் அழைத்துச் செல்லப்பட்டனர்.
செயின்ட் ஜோசப் கல்லூரி; உன்னத் பாரத் அபியான் திட்டத்தின் ஒருங்கிணைப்பாளர் திரு டொமினிக் வந்தவர்களை வரவேற்றார் முடிவில் இணை ஒருங்கிணைப்பாளர் திரு ஜெயச்சந்திரன் நன்றி கூறினார் இளநிலை ஒருங்கிணைப்பாளர்கள் ஜெயசீலன் ஜோசப் கிறிஸ்து ராஜா யசோதை சுதாகர் இளநிலை உதவியாளர் அமலேஸ்வரன் மற்றும் உன்னத் பாரத் அபியான் திட்ட செல் குழுவினர் இதற்கான ஏற்பாடுகளைச் செய்திருந்தனர்.














