• Home
  • தமிழ்நாடு
  • சாக்சீடு தொண்டு நிறுவனத்தில் அகில உலக பெண்கள் தினம் இன்று 12.03.2026  நடைபெற்றது.
தமிழ்நாடு

சாக்சீடு தொண்டு நிறுவனத்தில் அகில உலக பெண்கள் தினம் இன்று 12.03.2026  நடைபெற்றது.

Email :16

சாக்சீடு தொண்டு நிறுவனத்தில் அகில உலக பெண்கள் தினம் இன்று 12.03.2026  நடைபெற்றது. நிகழ்ச்சியில் ஸ்ரீரங்கம் அனைத்து மகளிர் காவல் நிலைய உதவி காவல் ஆய்வாளர் TPL. மாதாரசி ஸ்டெல்லா மேரி அவர்கள் தலைமையுரை ஆற்றினார். சமூகத்தில் பெண் குழந்தைகள் பெற்றோரின் வழிகாட்டுதல் படி நடக்க வேண்டும் என்பது பற்றியும் பேசினார். வழக்கறிஞர் T. ஜெயந்திராணி அவர்கள் சிறப்பு ரையாற்றினார். 

திருச்சி மாவட்ட குழந்தைகள் நலக்குழு உறுப்பினர் S.கோமதி அவர்கள் முன்னிலை வகுத்தார்.

புனித சிலுவை தன்னாட்சி கல்லூரி சமூக பணித்துறை  தலைவர். முனைவர். அனிதா பாண்டியன் அவர்கள் வாழ்த்துரை வழங்கினார். திரு. C. சசி அவர்கள் வரவேற்புரை வழங்கினார்.

நிகழ்ச்சியில் சமூக பணியாளர்கள், பெண் ஆளுமைகளுக்கு விருதுகள் வழங்கி கௌரவிக்கப் பட்டனர்.

மேலும் நிகழ்ச்சியில் பட்டார்வோர்த் ரோடு RC நடுநிலைப்பள்ளி, பொன்மலை புனித சிலுவை பெண்கள் மேல்நிலைப்பள்ளி, வடுகர்பேட்டை புனித வளனார் மேல்நிலைப்பள்ளி மாணவிகளின் கலைநிகழ்ச்சிகள் மற்றும் புனித சிலுவை தன்னாட்சி கல்லூரி புணர்வாழ்வியல் துறை மாணவிகளின் விழிப்புணர்வு நாடகமும் நடைபெற்றது. நிகழ்ச்சியில் சுமார் 200 பேர் கலந்து கொண்டனர்.        திருமதி.ஆர்த்தி &திரு. லாரன்ஸ் ஆகியோர் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினர். இறுதியாக  திரு. ஜோசப் நன்றி கூறினார்.நிகழ்ச்சியின் அனைத்து ஏற்படுகளையும் சாக்சீடு இயக்குனர் அருட். சகோதரி. பரிமளா சேவியர் செய்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Posts