பணி ஒய்வு பாராட்டு விழா!
பொன்மலை ரயில்வே கேரேஜ் பணிமனையில் முதன்மை அலுவலர் மேற்பார்வையாளராக 40 வருடம் பணிபுரிந்து மார்ச் 31.03.26 ஒய்வு பெறும் திருச்சி மாவட்ட தடகள சங்க பொருளாளருமான ரவிசங்கர் அவருக்கு பாராட்டு விழா பொன்மலையில் நடந்தது.


விழாவிற்கு சி.ஆர்.எஸ் ஷாப் சீனியர் செஷ்சன் பொறியாளர் பாலமுருகன், சரவணன் தலைமையில் நடந்தது. விழாவில் ரவிசங்கர் அவரின் தடகளத்தின் செய்த சாதனைகளை, பணிமனையில் சிறப்பாக வேலை செய்ததை பற்றியும் பாராட்டி பேசினார்கள்.

மேலும் விழாவிற்கு வந்தவர்கள் மாலை அணிவித்து நினைவு பரிசுகள் வாங்கி வாழ்த்து தெரிவித்தார்கள். விழாவில் மக்கள் சக்தி இயக்க மாநில பொருளாளர் கே.சி. நீலமேகம், ஏ.பி.ஒ (ஓய்வு) சுந்தரமூர்த்தி, திருச்சி மாவட்ட தடகள வீரர்கள் மனோகரன், கண்ணன், நாகராஜ், பாலு, சுதமணி, ரயில்வே யூனியன் நண்பர்கள், தொழிலாளர்கள் கலந்துக் கொண்டு சிறப்பத்தார்கள்.














