• Home
  • தமிழ்நாடு
  • தமிழ்நாடு அறிவியல் இயக்கம் சார்பில் தேசிய வருவாய்வழி திறனாய்வு தேர்வில் (NMMS) வெற்றி பெற்ற 36 மாணவர்களுக்கு/பயிற்சி ஆசிரியர்களுக்கு பாராட்டு நிகழ்வு!
தமிழ்நாடு

தமிழ்நாடு அறிவியல் இயக்கம் சார்பில் தேசிய வருவாய்வழி திறனாய்வு தேர்வில் (NMMS) வெற்றி பெற்ற 36 மாணவர்களுக்கு/பயிற்சி ஆசிரியர்களுக்கு பாராட்டு நிகழ்வு!

Email :103

தமிழ்நாடு அறிவியல் இயக்கம் சார்பில் தேசிய வருவாய்வழி திறனாய்வு தேர்வில் (NMMS) வெற்றி பெற்ற 36 மாணவர்களுக்கு/பயிற்சி ஆசிரியர்களுக்கு பாராட்டு நிகழ்வு!

தமிழ்நாடு அறிவியல் இயக்கம் திருச்சிராப்பள்ளி மாவட்டம் சார்பில் இன்று 24.03.2026 புனித வளனார் கல்லூரி மேல்நிலைப் பள்ளியில் தேசிய வருவாய்வழி திறனாய்வு தேர்வில் (NMMS) வெற்றி பெற்ற 36 மாணவர்களுக்கும், பயிற்சி ஆசிரியர்களுக்கும் பாராட்டு நிகழ்வு நடத்தப்பட்டது.

இந்நிகழ்விற்கு தமிழ்நாடு அறிவியல் இயக்கம் மாவட்ட தலைவர் ஜான்சன் பிரான்சிஸ் தலைமை வகித்தார். தொடக்கத்தில் துளிர் திறனறிதல் தேர்வு மாவட்ட ஒருங்கிணைப்பாளர் க.பகுத்தறிவன் அனைவரையும் வரவேற்றார்.

மாவட்டச் செயலாளர் பேரா.அருண்விவேக் அறிமுகவுரையாற்றி, பாராட்டுரை வழங்கினார். பள்ளி தாளாளர் அருள்திரு.ஆரோக்கிய சாமி, தலைமை ஆசிரியர் அருட்தந்தை.ஜார்ஜ், அருள்தந்தை பாஸ்கர், அறிவியல் இயக்க மாநிலச் செயலாளர் மு.மணிகண்டன் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினார்கள்.

மாவட்டத்தில் துளிர் திறனறிதல் தேர்வில் அதிக மாணவர்களை பங்கேற்பு செய்தமைக்காகவும், NMMS தேர்வில் அதிக மாணவர்களை தேர்ச்சி பெற்றமைக்காகவும் தலைமை ஆசிரியர் பாராட்ட பெற்றார்.

தேசிய வருவாய்வழி திறனாய்வு தேர்வில் (NMMS) வெற்றி பெற்ற 36 மாணவர்களுக்கும்/ பயிற்சி ஆசிரியர்களுக்கும் பாராட்டி புத்தக பரிசு வழங்கப்பட்டது. நிறைவாக துளிர் திறனறிதல் தேர்வு மாவட்ட இணை ஒருங்கிணைப்பாளர் வே.சுகுணா நன்றி கூறினார். தேர்ச்சி பெற்ற அனைத்து மாணவர்களும் இந்தக் கல்வியாண்டில் தமிழ்நாடு அறிவியல் இயக்கம் நடத்திய துளிர் திறனறிதல் தேர்வில் பங்கு பெற்று சிறப்பிடம் பெற்றவர்கள் என்பது குறிப்பிடதக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Posts