திருச்சி செயின்ட் ஜோசப் தன்னாட்சிக் கல்லூரியின் செப்பர்டு விரிவாக்கத்துறை பணி செய்யும் கிராம மாணாக்கர்களை இலக்காக் கொண்டு போட்டித் தேர்வு பயிற்சி மற்றும் திறன் வளர்ப்புத்திட்ட கோடைகால சிறப்பு பயிற்சியை 09.04.2026 முதல் 19.04.2026 வரை கல்லூரி வளாகத்தில் நடத்தி வருகிறது.




கிராமப்புற மாணாக்கர்கள் போட்டித் தேர்வை எதிர்கொள்வதற்கும் பல்வேறு திறன்களை வெளிப்படுத்தவும் போட்டித்தேர்வில் வெற்றி பெற்று அரசுபணியில் சேர்வதற்கும் வாய்ப்பாக அமையும் நோக்கத்தில் இப்பயிற்சி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதன் தொடக்கவிழா கல்லூரியின் சமுதாயக்கூடத்தில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் கல்லூரி கலைமனைகளின் அதிபர் அருள்முனைவர் பவுல்ராஜ் மைக்கேல் சேச தலைமையேற்று உரையாற்றினர்.

தலைமை விருந்தினாராக கேர் அகாடமியின் இயக்குநர் பேராசிரியர் முத்தமிழ் செல்வன் கலந்து கொண்டு போட்டி தேர்வுக்கான நுணுக்களை பற்றி விளக்கவுரையாற்றினார்.

விரிவாக்கத்துறை இயக்குநர் அருள்முனைவர் சகாயராஜ் சேச வரவேற்பு வழங்கி, பயிற்சியின் நோக்கத்தை வரையறுத்தார். செப்பர்டு விரிவாக்கத்துறை இளநிலை ஒருங்கிணைப்பாளர் ஜோசப் கிறிஸ்து ராஜா நன்றி கூறினார். செப்பர்டு விரிவாக்கத்துறை முதுநிலை ஒருங்கிணைப்பாளர் லெனின் நிகழ்ச்சி நெறியாளுகை செய்தார்.


இப்பயிற்சியில் பங்கேற்கும் மாணவ மாணவிகளுக்கு தனித்தனியாக தங்குவதற்கு விடுதிகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. வார இறுதி நாட்களில் சுற்றுலா தளங்களுக்கு அழைத்துச் செல்ல ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. பயிற்சி நடைபெறும் நாட்களில் ஒவ்வொரு நாள் காலை யோகாவும் மாலை போட்டித் தேர்வுகளும் அதன் பிறகு விளையாட்டும் நடைபெறும்.


இப்பயிற்சிக்கு 15 கிராமங்களிலிருந்து பன்னிரண்டாம் வகுப்பு முடித்த 60 மாணவ, மாணவிகள் தாங்கள் பெற்றோர் மற்றும் பாதுகாவலருடன் சுமார் 140 நபர்கள் பங்கேற்றனர். விரிவாக்கத்துறை ஒருங்கிணைப்பாளர்கள் ஜெயசந்திரன் ஜெயசீலன் யசோதை சுதாகர் இளநிலை உதவியாளர் அமலேஸ்வரன் ஆகியோர் ஏற்பாடு செய்திருந்தார்கள்.















