திருச்சி மாவட்டத்தில் மக்கள் சக்தி இயக்க மாநில துணை செயலாளர் ஆர்.இளங்கோ மகள் திருமண வரவேற்பு விழாவில் சமூக அக்கறையை வெளிப்படுத்தும் வகையில் வித்தியாசமான நிகழ்வு நடைபெற்றது.
திருமண வரவேற்பு நிகழ்ச்சி நிறைவடைந்த பின்னர், “ரத்ததானம் – உயிர் தானம்” என்ற உயர்ந்த சேவையை தொடர்ந்து செய்து வரும் திருச்சி மாவட்டம் முசிறி பகுதியில் ஆசிரியராக பணியாற்றி வரும் திரு. ந.கண்ணன் என்பவர் 100 முறை ரத்ததானம் செய்த சமூக சேவையை பாராட்டும்

விதமாக மேடைக்கு அழைத்து அனைவரின் முன்னிலும் பொன்னாடை போர்த்தி கவுரவித்தனர். மேலும் அவருக்கு மக்கள் சக்தி இயக்க மாநில தலைவர் டாக்டர் த.ராசலிங்கம், மாநில பொதுசெயலாளர் முனைவர் எல்.பாஸ்கரன், மாநிலப் பொருளாளர் கே.சி.நீலமேகம் மற்றும் பொன்மலை ரயில்வே பென்சன்’ஸ் சங்க செயலாளர் இராமசாமி ஆகியோர் பாராட்டு சான்றிதழ் மற்றும் நூல்கள் வழங்கி வாழ்த்துக்கள் தெரிவித்தனர்.

இந்த நிகழ்வு திருமண விழாவில் கலந்து கொண்டவர்களிடையே சமூக பொறுப்புணர்வை எடுத்துக்காட்டும் இந்த திருமண வரவேற்பு நிகழ்வு அனைவரின் கவனத்தை ஏற்படுத்தியதுடன், ரத்ததானத்தின் அவசியத்தையும் எடுத்துரைக்கும் வகையில் அமைந்தது.














