இன்று 25.06.2026 சாக்சீடு நிறுவனத்தில் உலக போதை எதிர்ப்பு தின விழா நடைபெற்றது. திரு டயஸ் ஒருங்கிணைப்பாளர் அவர்கள் வரவேற்புரை ஆற்றினார். மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர் திரு. சரவணன் தலைமை தாங்கினார்.

திருச்சி வடக்கு ஸ்ரீரங்கம் காவல் உதவி ஆணையர் உயர்திரு சீதாராமன் அவர்கள் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு போதை எதிர்ப்பு தின உறுதிமொழி ஏற்று நிகழ்வின் முக்கியத்துவம் குறித்து பேசினார்.

நிகழ்ச்சிக்கு முனைவர் அருட். சகோதரி லூர்துமேரி பேராசிரியர் புணர் வாழ்வியல் துறை புனித சிலுவை தன்னாட்சிக் கல்லூரி அவர்கள் முன்னிலையில் வகித்தார். கோட்டை காவல் ஆய்வாளர் திரு ஜெய்சன் பிரேம் ஆனந்த் அவர்களும் கலந்து கொண்டார். குடி நோயிலிருந்து விடுபட்டு பல வருடங்களை கடந்து நலமுடன் வாழும் பயனாளிகளுக்கு விருதுகள் வழங்கி கௌரவிக்கப்பட்டது.

விழாவில் RC பள்ளி &பொன்மலை புனித சிலுவை பெண்கள் மேல் நிலைப்பள்ளி மாணவிகளின் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றது. புனித சிலுவை கல்லூரி புணர்வாழ்வியல் துறை மாணவிகளின் போதையினால் ஏற்படும் தீமைகள் குறித்த விழிப்புணர்வு நாடகம் நடத்தினர். நிகழ்ச்சியின் அனைத்து ஏற்பாடுகளையும் நிறுவன இயக்குனர் அருட் சகோதரி. பரிமளா சேவியர் அவர்கள் ஏற்பாடு செய்திருந்தார். பயனாளிகள் மற்றும் பள்ளி கல்லூரி மாணவிகள் சுமார் 200 பேர் கலந்துகொண்டனர். திரு. ஜோசப் அவர்கள் நன்றியுரை ஆற்றினார். ஒருங்கிணைந்த மாற்று சிகிச்சை மறுவாழ்வு மைய ஆலோசகர்கள் திருமதி. ஆர்த்தி & நல்லாங்காள் இருவரும் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினார்கள்.












