• Home
  • தமிழ்நாடு
  • இன்று காலை திருவானைக்காவல் அரசு கிளை நூலக வாசகர் வட்டம் மற்றும் ஸ்ரீமத் ஆண்டவன் கலை மற்றும் அறிவியல் கல்லூரி இணைந்து நடத்திய வாசகர் வட்டம் நிகழ்ச்சி கல்லூரி வளாகத்தில் சிறப்பாக நடைபெற்றது.
தமிழ்நாடு

இன்று காலை திருவானைக்காவல் அரசு கிளை நூலக வாசகர் வட்டம் மற்றும் ஸ்ரீமத் ஆண்டவன் கலை மற்றும் அறிவியல் கல்லூரி இணைந்து நடத்திய வாசகர் வட்டம் நிகழ்ச்சி கல்லூரி வளாகத்தில் சிறப்பாக நடைபெற்றது.

Email :21

இன்று 29.06.2026 திங்கள் காலை திருவானைக்காவல் அரசு கிளை நூலக வாசகர் வட்டம் மற்றும் ஸ்ரீமத் ஆண்டவன் கலை மற்றும் அறிவியல் கல்லூரி இணைந்து நடத்திய வாசகர் வட்டம் நிகழ்ச்சி கல்லூரி வளாகத்தில் சிறப்பாக நடைபெற்றது.

இதில் சிறப்பு விருந்தினராக *செந்தமிழ் செல்வி காருண்யா நடராஜன்* அவர்கள் கலந்துகொண்டு *கருமமே கட்டளைக் கல்* எனும் தலைப்பில் மிக சிறப்பாக உரையாற்றினார். நாம் செய்யும் செயல்களே நம் மதிப்பு மரியாதையை உயர்த்தும் என்றும் நல்லவிதமாக நம் செயல்கள் அமைய நாம் கற்கும் கல்வியும் புத்தகங்களும்

அமைத்து தரும் என்றும் பொருளில் நல்ல உதாரணங்களுடன் பேசி மாணவ‌ மாணவிகளின் நன்மதிப்பைப் பெற்றார். செந்தமிழ் செல்வி காருண்யா நடராஜன் அவர்களுக்கு மனமார்ந்த நன்றிகள்.

இன்றைய நிகழ்ச்சி கல்லூரியும் திருவானைக்காவல் அரசு கிளை நூலகமும் இணைந்து நடத்திய 91 வது நிகழ்வாகவும் 10 ம் ஆண்டின் துவக்க நிகழ்ச்சியாக அமைந்தது கல்லூரி நூலகத் துறை பேராசிரியர்களுக்கும் அரசு கிளை நூலகர் உள்ளிட்ட  அனைவருக்கும் மட்டற்ற மகிழ்ச்சி.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Posts