• Home
  • தமிழ்நாடு
  • தமிழ்நாடு மாநில எய்ட்ஸ் கட்டுப்பாட்டு சங்க உதவியுடன் (TANSACS) மாவட்ட ஒருங்கிணைந்த எய்ட்ஸ் தடுப்பு மற்றும் கட்டுப்பாட்டு அலகுடன்  (DISHA) இணைந்து மக்கள் மேம்பாட்டு வினையகம் (PDI) ஒருங்கிணைப்பில் இன்று நடைபெற்றது.
தமிழ்நாடு

தமிழ்நாடு மாநில எய்ட்ஸ் கட்டுப்பாட்டு சங்க உதவியுடன் (TANSACS) மாவட்ட ஒருங்கிணைந்த எய்ட்ஸ் தடுப்பு மற்றும் கட்டுப்பாட்டு அலகுடன்  (DISHA) இணைந்து மக்கள் மேம்பாட்டு வினையகம் (PDI) ஒருங்கிணைப்பில் இன்று நடைபெற்றது.

Email :1

தமிழ்நாடு மாநில எய்ட்ஸ் கட்டுப்பாட்டு சங்க உதவியுடன் (TANSACS) மாவட்ட ஒருங்கிணைந்த எய்ட்ஸ் தடுப்பு மற்றும் கட்டுப்பாட்டு அலகுடன்  (DISHA) இணைந்து மக்கள் மேம்பாட்டு வினையகம் (PDI) ஒருங்கிணைப்பில் 27.06.2026 இன்று காலை சுமார் 11  மணியளவில் முசிறி வட்டாரம் அய்யம்பாளையம் பகுதியல் உள்ள உயர்நிலை பள்ளியில் இலக்கு மக்கள் ஒன்றுகூடல் நிகழ்வு-2026 மற்றும் மருத்துவ பரிசோதனை முகாம் நடைபெற்றது.
இந்நிகழ்ச்சிக்கு திருமிகு.கார்த்திக்  அய்யம்பாளையம் முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் மற்றும் மாமன்ற உறுப்பினர் அவர்கள் கலந்துகொண்டு சிறப்பித்தனர்.  

மேலும் நிகழ்ச்சியில் கருத்துறையாற்ற திருமிகு.கோபிநாத் ஆலோசகர் தண்டலை புதூர்.  அரசு ஆரம்ப சுகாதார நிலையம் அவர்கள் கலந்து கொண்டு எச்ஐவி/எய்ட்ஸ் பற்றிய அடிப்படை தகவல்கள் மற்றும் சிகிச்சை முறைகள் பற்றியும் முழுமையான எச்ஐவி பரவலை தடுக்க நாம் செய்ய வேண்டிய முக்கிய பணிகள் பற்றி தெளிவாக எடுத்து கூறினார்.
இந்நிகழ்ச்சியை  திரு.முத்துக்குமார் திட்ட மேலாளர் (PDI) அவர்கள் வரவேற்று நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினார்.
நிகழ்ச்சி மக்கள் மேம்பாடு வினையகம் (PDI) களபணியாளர் திருமிகு.ஆர். அமுதா மற்றும் முன்மாதிரி கல்வியாளர் திருமிகு.பத்மாவதி ஆகியோரால் ஒருங்கினைக்கபட்டது.    
நிகழச்சியின் முடிவில் இலவச அடிப்படை பரிசோதனை மற்றும்  HIV/VDRL பரிசோதனை முகாம் நடைபெற்றது இதில் சுமார் 31 நபர்கள் தன் ஆர்வமாக பரிசோதனை எடுத்து கொண்டனர். கலந்துகொண்ட அனைவருக்கும் இலவச பொது மருத்துவ சிகிச்சை வழங்கபட்டது. விளிம்புநிலை இலக்குமக்கள் சுமார் 104  நபர்கள் கலந்துகொண்டனர்.
நிகழ்ச்சியின் முடிவில் திரு.ஆர்.அமுதா  TI  திட்ட காளபணியாளர் முசிறி வட்டாரம்அவர்கள் அனைவருக்கும் நன்றி கூறினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Posts