கடந்த 24.06.2026 அன்று மண்ணச்சநல்லூர் வட்டாரத்தில் அமைந்துள்ள அருள்மிகு சமயபுரம் மாரியம்மன் திருக்கோவிலில் வேலை பார்க்கும் ஊழியர்களுக்கு அடிப்படை இலவச மருத்துவ பரிசோதனை முகாம் நடைபெற்றது. இம்முகாம் Dr. T. மணிவண்ணன் DHO திருச்சிராப்பள்ளி அவர்கள் தலைமையில் நடைபெற்றது. இம்முகாமில் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்ட சமயபுரம் கோவில் இணை ஆணையர் திரு.மு.சூரிய நாராயணன் அவர்கள் பணியாளர்களின் நலனின் முக்கியதுவம் பற்றி எடுத்து கூறினார். மேலும் இம்முகாமை சிறப்பாக அமைய வழிகாட்டிய மருத்துவர் J.சிவக்குமார் வட்டார மருத்துவ அலுவலர் சிறுகாம்பூர் மற்றும் மருத்துவர் S. தீபிகா மருத்துவ அலுவலர் சமயபுரம் மற்றும் திருமதி T. விமல் ஆரோக்கியமேரி, திட்ட மேலாளர், மாவட்ட ஒருங்கிணைத்த எய்ட்ஸ் கட்டுப்பாட்டு அலகு திருச்சிராப்பள்ளி அவர்கள் கலந்து கொண்டு விளக்கவுரை வழங்கினார்கள். மேலும் மண்ணச்சநல்லூர், சிறுகாம்பூர், ஓமாந்தூர் அரசு மருத்துவமனை நம்பிக்கைமைய ஆலோசகர்கள் மற்றும் ஆய்வக நுட்புணர்கள் PDI மற்றும் நிலா NGO பணியாளர்கள் முகாமை ஒருங்கினைத்து வழிநடத்தினர். இம்முகாமில் 200க்கும் மேற்பட்ட சமயபுரம் கோவில் பணியாளர்கள் கலந்து கொண்டு பயனடைந்தனர்.












