• Home
  • தமிழ்நாடு
  • பிளாஸ்டிக் பை இல்லாத தினத்திலும் மாறாத டீக்கடை பழக்கம் – 5 நிமிடத்தில் 5 பார்சல்!
தமிழ்நாடு

பிளாஸ்டிக் பை இல்லாத தினத்திலும் மாறாத டீக்கடை பழக்கம் – 5 நிமிடத்தில் 5 பார்சல்!

Email :13

பிளாஸ்டிக் பை இல்லாத தினத்திலும் மாறாத டீக்கடை பழக்கம் – 5 நிமிடத்தில் 5 பார்சல்!

திருச்சி, ஜூலை 3: உலக பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம் இன்று. ஆனால் நகரின் ஒரு சாதாரண டீக்கடையில் 5 நிமிடத்தில் எடுக்கப்பட்ட இந்த படங்கள் வேதனை தருகின்றன.

சூடான டீ பிளாஸ்டிக் கவர்களில் ஊற்றி, அதையும் ஒரு கேரி பேக்கில் போட்டு கொடுக்கும் காட்சி தொடர்கிறது. தடை செய்யப்பட்ட ஒருமுறை பயன்பாட்டு பிளாஸ்டிக், சூடான பானத்துடன் சேரும் போது உடல்நலத்துக்கும் கேடு.

விழிப்புணர்வு நாளில் மட்டும் போஸ்டர் ஒட்டுவது போதாது. கடைக்காரர்களுக்கு மாற்று கொடுக்கணும், வாடிக்கையாளர்களும் ஒரு டம்ளர் / பாட்டில் கொண்டு வர பழகணும். இல்லைனா இந்த பிளாஸ்டிக் பை இல்லாத தினம் வெறும் காலண்டர் குறிப்பாகவே நின்றுவிடும். தண்ணீர் அமைப்பு, திருச்சி.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Posts