• Home
  • தமிழ்நாடு
  • முன்னாள் மாணவர் மன்றம் சார்பாக அருள் தந்தை ஜோ லாரன்ஸ் 11ஆம் ஆண்டு நினைவு கால்பந்து போட்டி புனித வளனார் கல்லூரி மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்றது.
தமிழ்நாடு

முன்னாள் மாணவர் மன்றம் சார்பாக அருள் தந்தை ஜோ லாரன்ஸ் 11ஆம் ஆண்டு நினைவு கால்பந்து போட்டி புனித வளனார் கல்லூரி மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்றது.

Email :19

முன்னாள் மாணவர் மன்றம் சார்பாக அருள் தந்தை ஜோ லாரன்ஸ் 11ஆம் ஆண்டு நினைவு கால்பந்து போட்டி புனித வளனார் கல்லூரி மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்றது.

மாவட்ட அளவில் பள்ளிகளுக்கு இடையே தொடங்கிய போட்டிகள் (01-07-26 முதல் 03-07-26) நடைபெற்றது.

இன்று இறுதி போட்டியை முதல் இடத்தை பிடித்த ஆர் எஸ் கே பள்ளி மற்றும் இரண்டாம் இடத்தை பெற்ற ஆல்ஃபா விஸ்டம் பள்ளி மாணவர்களுக்கு சுழல் கோப்பை மற்றும் பரிசு பொருட்களை வழங்கி மாணவர்களை சிறப்பு செய்தார்கள்.

வரவேற்புரையை முன்னாள் மாணவர் மன்றம் செயலர் திரு எஸ் டி ஆரோக்கிய பால்ராஜ் அவர்கள் அனைவரையும் வரவேற்றார்.

இதனைத் தொடர்ந்து தலைமை ஏற்று புனித வளனார் கலைமனைகளின் அதிபர்  அருள்முனைவர் எம் பவுல்ராஜ் சேச அவர்கள் மாணவர்களுக்கு சிறப்புரை வழங்கினார். வாழ்த்துறையை முன்னாள் மாணவர் திரு டாக்டர் டி ஐ ஜார்ஜ் அமலரத்தினம் முன்னாள் முதல்வர் ஜமால் கல்லூரி அவர்கள் மாணவர்களுக்கு

வாழ்த்துரை வழங்கினார். ஏற்புறையை தலைமை ஆசிரியர் மற்றும் முன்னாள் மாணவர் மன்றம் இயக்குனர் அருள்தந்தை V.  ஜார்ஜ் சேச அவர்கள் பங்கு பெற்ற மாணவர்களுக்கும்  பாராட்டுகளையும் வாழ்த்துகளையும் தெரிவித்தார்

மற்றும் முன்னாள் மாணவர் மன்ற உறுப்பினர்கள் மற்றும் உடற்கல்வி இயக்குனர் டி சகாயராஜ் உடற்கல்வி ஆசிரியர்கள் எஸ் பாரத், அருள் தினேஷ், குமார், ஆண்டனி பிரபு அவர்களுக்கும் வாழ்த்துக்களையும் பாராட்டுகளையும் தெரிவித்தார்.

நன்றியுரை முன்னாள் மாணவர் இணைச் செயலாளர் பள்ளியின் உதவி தலைமை ஆசிரியர் திரு பி ஹெச் எஸ் நியூட்டன் அவர்கள் அனைவருக்கும் நன்றி தெரிவித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Posts