• Home
  • தமிழ்நாடு
  • பெண்கள் உரிமைகள் குறித்த ஒருநாள் பயிற்சிப் பட்டறை நடைபெற்றது.
தமிழ்நாடு

பெண்கள் உரிமைகள் குறித்த ஒருநாள் பயிற்சிப் பட்டறை நடைபெற்றது.

Email :9

பெண்கள் உரிமைகள் குறித்த ஒருநாள் பயிற்சிப் பட்டறை நடைபெற்றது.
திருச்சிராப்பள்ளி, ஜூன் 27: திருச்சிராப்பள்ளி பிஷப் ஹீபர் கல்லூரி தன்னாட்சிக் கல்லூரியின் வணிகவியல் துறை சார்பில், புதுடெல்லி தேசிய மனித உரிமைகள் ஆணையத்தின் (NHRC) நிதியுதவியுடன் “பெண்கள் உரிமைகள்” குறித்த ஒருநாள் அடிப்படை பயிற்சிப் பட்டறை 27.06.2026 அன்று கல்லூரி கருத்தரங்கு கூடத்தில் நடைபெற்றது.
காலை நடைபெற்ற தொடக்க விழாவிற்கு கல்லூரியின் துணை-முதல்வர் டாக்டர் JGR. சத்தியசீலன் தலைமை தாங்கினார். வணிகவியல் துறைத் தலைவர் முனைவர் D. பென்னாலா ஆக்னஸ் ஐலின் முன்னிலை வகித்தார்.  திரு. J. அருள் ராபர்ட், பாலின நிபுணர் (Gender Specialist), DHEW (பெண்கள் Empowerment-க்கான மாவட்ட மையம்), மாவட்ட சமூக நல அலுவலகம், ஆட்சியர் அலுவலகம், திருச்சிராப்பள்ளி தொடக்கவுரையாற்றினார். மேலும், இப்பயிற்சி நிகழ்ச்சியின் நோக்கம் மற்றும் செயல்பாடுகள் குறித்து, கல்லூரி வணிகவியல் துறை உதவி பேராசிரியரும் நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளருமான முனைவர் து. வினோத் குமார் விளக்கமளித்தார்.

இந்நிகழ்ச்சியின் நோக்கம் பெண்களின் உரிமைகள், பாலின சமத்துவம், மனித கண்ணியம் மற்றும் சமூக நீதி குறித்த விழிப்புணர்வை மாணவர்கள் மற்றும் பொதுமக்களிடம் ஏற்படுத்துவதாகும். இந்திய அரசியலமைப்பில் பெண்களுக்கு வழங்கப்பட்டுள்ள சட்டப் பாதுகாப்புகள் மற்றும் உரிமைகள் குறித்து இதில் விரிவாக எடுத்துரைக்கப்பட்டது.
முதல் அமர்வில் மாவட்ட சமூக நல அலுவலர் திரு. J. அருள் ராபர்ட், பாலின நிபுணர் (Gender Specialist), DHEW (பெண்கள் Empowerment-க்கான மாவட்ட மையம்), மாவட்ட சமூக நல அலுவலகம், ஆட்சியர் அலுவலகம், திருச்சிராப்பள்ளி “இந்தியாவில் மனித உரிமை அமைப்பும் அரசியலமைப்புச் சட்டப் பாதுகாப்புகளும்” என்ற தலைப்பில் உரையாற்றினார்.

அதைத் தொடர்ந்து, தமிழ்நாடு தேசிய சட்டப் பல்கலைக்கழகத்தின் (TNNLU) இணையச் சட்டம் மற்றும் இணைய பாதுகாப்பு ஆய்வு மையத்தின் பேராசிரியர் செல்வி தீபா மாணிக்கம் பெண்களின் உரிமைகள் மற்றும் சட்டப் பாதுகாப்பு வழிமுறைகள் குறித்து விளக்கமளித்தார்.
மூன்றாவது அமர்வில் திருச்சிராப்பள்ளி மாவட்ட நீதிமன்ற வழக்கறிஞர் செல்வி சி. கார்த்திகா, பெண்களுக்கு எதிரான வன்முறைகள், பணியிட பாலியல் தொல்லைகள் மற்றும் சட்ட ரீதியான பாதுகாப்புகள் குறித்துப் பேசினார்.
நான்காவது அமர்வில் பாரதிதாசன் பல்கலைக்கழகக் கலைப்புல முதன்மையரும், மகளிரியல் துறைப் பேராசிரியருமான முனைவர் ந. முருகேஸ்வரி பெண்களின் கல்வி, வேலைவாய்ப்பு மற்றும் சுகாதார உரிமைகள் குறித்து சிறப்புரையாற்றினார்.
மாலை நடைபெற்ற நிறைவு விழாவிற்குப் பாரதிதாசன் பல்கலைக்கழகக் கலைப்புல முதன்மையரும் மகளிரியல் துறைப் பேராசிரியருமான முனைவர் N. முருகேஸ்வரி தலைமை தாங்கி, பங்கேற்பாளர்களுக்குச் சான்றிதழ்களை வழங்கினார். இப்பயிற்சிப் பட்டறையில் கருத்தரங்குகள், கலந்துரையாடல்கள் மற்றும் ஒலி-ஒளி காட்சிகள் இடம்பெற்றன.
இதில் 100-க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டு பயனடைந்தனர். இந்நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளைக் கல்லூரி வணிகவியல் துறை உதவி பேராசிரியரும் நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளருமான முனைவர் து. வினோத் குமார் மிகச்சிறப்பாக ஒருங்கிணைத்திருந்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Posts