• Home
  • தமிழ்நாடு
  • தேசிய குழந்தைகள் அறிவியல் மாநாடு 2026 – திருச்சிராப்பள்ளி மாவட்ட குழந்தைகள் பங்கேற்க அழைப்பு!
தமிழ்நாடு

தேசிய குழந்தைகள் அறிவியல் மாநாடு 2026 – திருச்சிராப்பள்ளி மாவட்ட குழந்தைகள் பங்கேற்க அழைப்பு!

Email :52

தேசிய குழந்தைகள் அறிவியல் மாநாடு 2026 – திருச்சிராப்பள்ளி மாவட்ட குழந்தைகள் பங்கேற்க அழைப்பு!

பெறுநர்:
பத்திரிகை ஆசிரியர் / செய்திப் பிரிவு பொறுப்பாளர்.

பொருள்: NCSC 2026 – திருச்சிராப்பள்ளி மாவட்ட குழந்தைகள் பங்கேற்க அழைப்பு

தமிழ்நாடு அறிவியல் இயக்கம் சார்பில் தேசிய குழந்தைகள் அறிவியல் மாநாடு (NCSC) கடந்த 32 ஆண்டுகளுக்கும் மேலாக தமிழ்நாட்டில் தொடர்ந்து நடத்தப்பட்டு வருகிறது. குழந்தைகளிடம் அறிவியல் சிந்தனை மற்றும் ஆய்வு மனப்பான்மையை வளர்க்கும் நோக்கில் நடைபெறும் NCSC 2026-ன் கருப்பொருள் “நிலைத்த வளர்ச்சிக்கான அறிவியல் மற்றும் புதிய கண்டுபிடிப்புகள்” என்பதாகும். இதில் 10–13 வயது ஜூனியர் பிரிவு, 14–17 வயது சீனியர் பிரிவு என இரண்டு பிரிவுகளில் குழந்தைகள் பங்கேற்கலாம்.

பள்ளியில் பயிலும் குழந்தைகள் மட்டுமின்றி, பள்ளியில் பயிலாத குழந்தைகளும், அரசு, அரசு உதவி, மெட்ரிக்குலேஷன், CBSE உள்ளிட்ட அனைத்து வகைப் பள்ளி மாணவர்களும் பங்கேற்கலாம். மேலும், 14–17 வயதுடைய பாலிடெக்னிக் மாணவர்களும் பங்கேற்கலாம். ஒவ்வொரு ஆய்வுக் குழுவிலும் இரண்டு குழந்தைகள் இணைந்து ஆய்வை மேற்கொள்ளலாம். குழந்தைகளின் ஆய்வுக்கு பள்ளி ஆசிரியர்கள் மட்டுமின்றி கல்லூரி மாணவர்களும் வழிகாட்டிகளாகச் செயல்படலாம். ஆய்வறிக்கைகளை தமிழ் அல்லது ஆங்கிலத்தில் தயாரிக்கலாம். சுற்றுச்சூழல், இயற்கை வளங்கள், வேளாண்மை, சுகாதாரம், தொழில்நுட்பம், சமூக மேம்பாடு உள்ளிட்ட நிலைத்த வளர்ச்சியுடன் தொடர்புடைய துறைகளில் அறிவியல் ஆய்வுகளை மேற்கொள்ளலாம்.

NCSC 2026-க்கான பதிவு https://n-csc.in இணையதளத்தில் நடைபெற்று வருகிறது. 15.08.2026 பதிவிற்கான கடைசி நாளாகும். திருச்சிராப்பள்ளி மாவட்டத்தைச் சேர்ந்த குழந்தைகள், மாணவர்கள் மற்றும் பள்ளிகள் அனைவரும் இவ்வாய்ப்பைப் பயன்படுத்தி பங்கேற்குமாறு தமிழ்நாடு அறிவியல் இயக்கம் அழைப்பு விடுத்துள்ளது. மேலும் தகவல்களுக்கு:
பேரா. லெட்டீசியா – மாவட்ட ஒருங்கிணைப்பாளர், 98405 98836, பேரா. கோபாலன் – மாவட்ட கல்வி ஒருங்கிணைப்பாளர், 99431 52103, பேரா. அருண்விவேக் – மாவட்டச் செயலாளர், 98941 97674
நன்றி.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Posts