• Home
  • தமிழ்நாடு
  • ஆசிரியர் தினத்தை முன்னிட்டு, மக்கள் சக்தி இயக்க மாநிலப் பொருளாளர் கே.சி. நீலமேகம் சார்பில் ஆசிரியர்கள் அனைவருக்கும் இதயம் கனிந்த வாழ்த்துகள் தெரிவிக்கப்பட்டுள்ளன.
தமிழ்நாடு

ஆசிரியர் தினத்தை முன்னிட்டு, மக்கள் சக்தி இயக்க மாநிலப் பொருளாளர் கே.சி. நீலமேகம் சார்பில் ஆசிரியர்கள் அனைவருக்கும் இதயம் கனிந்த வாழ்த்துகள் தெரிவிக்கப்பட்டுள்ளன.

Email :43

ஆசிரியர் தினத்தை முன்னிட்டு, மக்கள் சக்தி இயக்க மாநிலப் பொருளாளர் கே.சி. நீலமேகம் சார்பில் ஆசிரியர்கள் அனைவருக்கும் இதயம் கனிந்த வாழ்த்துகள் தெரிவிக்கப்பட்டுள்ளன.
ஆசிரியர் தினம்: அறிவை விதைக்கும் ஆசிரியர்களுக்கு கே.சி. நீலமேகம் வாழ்த்து.
ஆசிரியர் தினத்தை முன்னிட்டு, ஆசிரியர்கள் அனைவருக்கும் மக்கள் சக்தி இயக்க மாநிலப் பொருளாளர் கே.சி. நீலமேகம் இதயம் கனிந்த வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார்.
அவர் வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியில், “ஒரு நல்ல ஆசிரியர் பாடங்களை மட்டும் கற்றுத் தருவதில்லை; மாணவர்களின் வாழ்க்கைக்கு வழிகாட்டியாகவும், நல்ல சிந்தனைகளை விதைப்பவராகவும் திகழ்கிறார். ஒவ்வொரு மாணவனின் திறமையையும் அடையாளம் கண்டு, அவர்களை நல்ல மனிதர்களாகவும், பொறுப்புள்ள குடிமக்களாகவும் உருவாக்குவதில் ஆசிரியர்களின் பங்கு அளப்பரியது” என்று தெரிவித்துள்ளார்.
மேலும், “அறிவை வழங்கும் ஆசிரியர்களை மதிப்பதும், அவர்களின் அர்ப்பணிப்பை போற்றுவதும் ஒவ்வொரு தலைமுறையின் கடமை. கல்வியின் மூலம் சமூக மாற்றத்தை உருவாக்கும் அனைத்து ஆசிரியர்களுக்கும் ஆசிரியர் தின நல்வாழ்த்துகள்” என கே.சி. நீலமேகம் தெரிவித்துள்ளார்.
“ஆசிரியர் விதைக்கும் அறிவு – தலைமுறைகளை உருவாக்கும்!” என்ற கருத்துடன் ஆசிரியர் தின வாழ்த்துகளை அவர் தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Posts