மூத்த குடிமக்கள் நலன் குறித்து மாணவர்களுக்கான வினாடி–வினா போட்டி
திருச்சிராப்பள்ளி, 28.09.2026


திருச்சிராப்பள்ளி மாவட்ட சமூக நலத்துறை மற்றும் ஸ்ரீமதி இந்திரா காந்தி கல்லூரி இணைந்து, மாநில மூத்த குடிமக்களுக்கான செயல்திட்டத்தின் (SAPSrC) கீழ், மாணவர்களுக்கான “Silver Shield 2026” வினாடி–வினா போட்டியை நடத்தினர்.


“பெற்றோர் மற்றும் மூத்த குடிமக்களின் பராமரிப்பு மற்றும் நலன் சட்டம், 2007” தொடர்பாக மாணவர்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தும் நோக்கில் இப்போட்டி நடைபெற்றது.


இந்நிகழ்ச்சி 28.09.2026 இன்று காலை 11.00 மணிக்கு, ஸ்ரீமதி இந்திரா காந்தி கல்லூரியின் திருவள்ளுவர் அரங்கில் நடைபெற்றது. இதில் கல்லூரி மாணவர்கள் பங்கேற்றனர்.
நிகழ்ச்சியின் சிறப்பு உரை மற்றும் பரிசளிப்பு நிகழ்வில், திருச்சிராப்பள்ளி மாவட்ட சமூக நல அலுவலகம்–01-ன் பெண்கள் மேம்பாட்டு மைய பாலின நிபுணர் திருமதி S. மெஹருன் நிஷா, திரு. K. சந்தோஷ் குமார், Junior Assistant, DSWO, திருமதி B. ஆனந்தி, IT Assistant, DSWO, ஆகியோர் கலந்து கொண்டு சிறப்புரையாற்றி, போட்டியில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசுகளை வழங்கினார்.

மூத்த குடிமக்களின் உரிமைகள், அவர்களின் நலன் மற்றும் பெற்றோர்–மூத்த குடிமக்கள் பராமரிப்பு தொடர்பான சட்ட விதிமுறைகள் குறித்து மாணவர்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் இந்நிகழ்ச்சி அமைந்தது.
















