மூத்த குடிமக்களுக்கான “கண்ணியமான மற்றும் மகிழ்ச்சியான வாழ்க்கை” பென்சில் ஓவியப் போட்டி, திருச்சிராப்பள்ளி, 28.09.2026. திருச்சிராப்பள்ளி மாவட்ட சமூக நலத்துறை மற்றும் திருச்சிராப்பள்ளி பிஷப் ஹீபர் கல்லூரியின் விரிவாக்கப் பணிகள் துறை இணைந்து, மூத்த குடிமக்களின் நலன் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் “கண்ணியமான மற்றும் மகிழ்ச்சியான வாழ்க்கை – மூத்த குடிமக்கள்” என்ற தலைப்பில் பென்சில் ஓவியப் போட்டியை நடத்தின.
திருச்சிராப்பள்ளி பிஷப் ஹீபர் கல்லூரியின் பல்நோக்கு அரங்கில் 28.09.2026 இன்று காலை 11 மணிக்கு இந்நிகழ்ச்சி நடைபெற்றது.


நிகழ்ச்சிக்கு பிஷப் ஹீபர் கல்லூரியின் விரிவாக்கப் பணிகள் துறை டீன் முனைவர் ஆனந்த் கிதியோன் தலைமை வகித்து உரையாற்றினார்.
சிறப்பு விருந்தினராக மாவட்ட சமூக நல அலுவலகத்தின் பெண்கள் மேம்பாட்டு மையத்தின் நிதியியல் கல்வி நிபுணர் திருமதி K. ரோகிணி கலந்து கொண்டு சிறப்புரையாற்றியதுடன், போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகளை வழங்கினார்.


மூத்த குடிமக்கள் கண்ணியத்துடனும், மகிழ்ச்சியுடனும், பாதுகாப்புடனும் வாழ்வதன் அவசியம் குறித்து நிகழ்ச்சியில் வலியுறுத்தப்பட்டது. மூத்த குடிமக்களின் உரிமைகள் மற்றும் நலன் தொடர்பான விழிப்புணர்வை இளைஞர்கள் மற்றும் பொதுமக்களிடம் ஏற்படுத்தும் நோக்கத்துடன் இப்போட்டி நடைபெற்றது.















