முதியோருக்கு பாதுகாப்பான, கண்ணியமான மற்றும் மகிழ்ச்சியான வாழ்க்கை – ஓவியப் போட்டி
திருச்சிராப்பள்ளி, செப். 28: திருச்சிராப்பள்ளி புனித ஜோசப் கல்லூரி (தன்னாட்சி) மற்றும் மாவட்ட சமூக நலத்துறை (DSWO), திருச்சி இணைந்து “முதியோருக்கு பாதுகாப்பான, கண்ணியமான மற்றும் மகிழ்ச்சியான வாழ்க்கை” என்ற தலைப்பில் ஓவியப் போட்டியை இன்று (செப். 28) நடத்தினர்.



புனித ஜோசப் கல்லூரி வளாகத்தில் உள்ள L.H. Block, அறை எண் 14-ல் பிற்பகல் 2 மணிக்கு இப்போட்டி நடைபெற்றது. இதில் இளநிலை, முதுநிலை மாணவர்கள் மற்றும் தேசிய சேவைத் திட்ட (NSS) தன்னார்வலர்கள் பங்கேற்றனர்.
நிகழ்வில் கல்லூரி முதல்வர் அருட்தந்தை முனைவர் K. Arockiam SJ தலைமையுரையாற்றினார்.



துணை முதல்வர் முனைவர் D. Kumar, மாணவர் நலத்துறை துணை முதல்வர் முனைவர் J. Charles ஆகியோர் சிறப்பித்தனர்.
திருச்சி மாவட்ட சமூக நலத்துறையின் இளநிலை உதவியாளர் திரு. K. Santhosh Kumar சிறப்புரையாற்றி, போட்டியில் வெற்றி பெறுபவர்களுக்கு சான்றிதழ் மற்றும் பரிசுகளை வழங்கினார்கள்.


இந்நிகழ்வை முனைவர் J. Arputha Sahaya Raj, உதவிப் பேராசிரியரும் NSS திட்ட அலுவலருமானவர் ஒருங்கிணைத்தார். பெண்கள் மேம்பாட்டு மைய பாலின நிபுணர் திருமதி S. மெஹருன் நிஷா, DSWO, Trichy மற்றும் திருமதி B. ஆனந்தி, IT Assistant, DSWO, Trichy ஆகியோரும் பங்கேற்றனர்.


“முதியோரின் பாதுகாப்பு, கண்ணியம் மற்றும் மகிழ்ச்சியான வாழ்வை வலியுறுத்தும் வகையில் இப்போட்டி மாணவர்களின் படைப்பாற்றலையும் சமூகப் பொறுப்புணர்வையும் வெளிப்படுத்தும் நோக்கில் ஏற்பாடு செய்யப்பட்டது.”















