• Home
  • தமிழ்நாடு
  • செயின்ட் ஜோசப் கல்லூரியில் பன்னாட்டுக் கருத்தரங்கத் தொடக்க விழா!
தமிழ்நாடு

செயின்ட் ஜோசப் கல்லூரியில் பன்னாட்டுக் கருத்தரங்கத் தொடக்க விழா!

Email :35

செயின்ட் ஜோசப் கல்லூரியில் பன்னாட்டுக் கருத்தரங்கத் தொடக்க விழா!
திருச்சி செயின்ட ஜோசப் கல்லூரித் தமிழாய்வுத்துறையில் தமிழ் மரபு வலியுறுத்தும் நீடித்த வளர்ச்சி இலக்குகள் என்னும் மையப்பொருளில் பன்னாட்டுக் கருத்தரங்கம் நடைபெற்றது. கருத்தரங்கத் தொடக்க விழாவிற்குக் கல்லூரிச் செயலர் அருள்முனைவர் ம.ஆரோக்கியசாமி சேவியர், சே.ச. தலைமை வகித்தார்.

தமிழாய்வுத்துறைத் தலைவர் முனைவர் ஆ.ஜோசப் சகாயராஜ் அனைவரையும் வரவேற்று கருத்தரங்க நோக்கவுரையாற்றினார். கல்லூரி அதிபர் அருள்முனைவர் பவுல்ராஜ் மைக்கேல், சே.ச. கருத்தரங்கத் தொடக்கவுரையாற்றினார். 70 ஆய்வுக் கட்டுரைகள் அடங்கிய நவீனத் தமிழாய்வு ஆய்வுக்கோவையைக் கல்லூரி முதல்வர் அருள்முனைவர் கு.ஆரோக்கியம், சே.ச. ஆய்வுக்கோவையை வெளியிட முதுதமிழ் எழிலரசி கேத்தரீன் ஆரோக்கியசாமி பெற்றுக்கொண்டார்.

பணிமுறை இரண்டு தமிழ்த்துறை ஒருங்கிணைப்பாளர் பாக்கிய செல்வ ரதி நன்றியுரையாற்றினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Posts