தூய வளனார் கல்லூரி முதல்வருக்கு திருச்சி எலைட் லயன்ஸ் சங்கம் விருதளித்துப் பாராட்டு!
தூய வளனார் கல்லூரி நாட்டு நலப்பணித் திட்டம், இளையோர் செஞ்சிலுவைச் சங்கம் திருச்சிராப்பள்ளி எலைட் லயன்ஸ் சங்கத்துடன் இணைந்து உடல் உறுப்பு தான விழிப்புணர்வு நிகழ்வை நடத்தியது. திருச்சிராப்பள்ளி காவேரி மருத்துவமனை சிறுநீரகவியல் மருத்துவர் சுப்ரியா சிவக்குமார் சிறப்பு விருந்தினராகப் சிறப்பு விருந்தினராகப் பங்கேற்று சிறப்பித்தார்.

இவ்விழாவில் பன்னாட்டு லயன்ஸ் சங்கங்களின் திருச்சி எலைட் சங்கக் கிளை திருச்சி தூய வளனார் கல்லூரி முதல்வர் அருள்முனைவர் கு. ஆரோக்கியம் அவர்களுக்கு சிறந்த பேராசிரியர் மற்றும் ஆராய்ச்சியாளர் விருதை வழங்கி சிறப்பித்தது.

இவ்விழாவில் லயன்ஸ் சங்க நிர்வாகிகள் லயன் தினகரன், லயன் சதீஷ்குமார், லயன் புண்ணியமூர்த்தி, கல்லூரி இணை முதல்வர் முனைவர் த.குமார், துணை முதல்வர் எஸ் ஆர்.செந்தில் குமார் உள்ளிட்டோர் பங்கேற்றுச் சிறப்பித்தனர். நாட்டு நலப்பணித் திட்டம் மற்றும் இளையோர் செஞ்சிலைச் சங்க உறுப்பினர்கள் பங்கேற்று பயன்பெற்றனர்.














