காந்தி ஜெயந்தி அன்று செயின்ட் ஜோசப் கல்லூரியின் விரிவாக்கத்தறை செப்பர்டு சார்பாக உன்னத் பாரத் இயக்கத்தின் 2.0 கீழ் கிராம ஊராட்சிகளில் கிராம சபைக் கூட்டம்!
திருச்சிராப்பள்ளி: காந்தி ஜெயந்தி அன்று செயின்ட் ஜோசப் கல்லூரியின் விரிவாக்கத்தறை செப்பர்டு சார்பாக உன்னத் பாரத் இயக்கத்தின் 2.0 கீழ் மணிகண்டம் ஒன்றியம் இனாம்மத்தூர், சேதுராப்பட்டி, யாகபுடையான்பட்டி, நாகமங்கலம் மற்றும் இன்னாம்குளத்தூர் ஆகிய கிராம ஊராட்சிகளில் கிராம சபைக் கூட்டம் நடைபெற்றது
மத்திய கல்வி அமைச்சகத்தின் அறிவுறுத்திலின் படியும் கல்லூரி முதல்வர் அருள் முனைவர் ஆரோக்கியம் சே ச தலைமையில் விரிவாக்கத்துறையின் இயக்குநர் அருள்முனைவர் சகாயராஜ் சே ச உன்னத் பாரத இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் பேராசிரியர் அலெக்ஸாண்டர் மற்றும்


துணை ஒருங்கிணைப்பாளர் லெனின் ஆகியோரின் ஆலோசனைப்படி
விரிவாக்கத்துறை ஒருங்கிணைப்பாளர் ஜெயசீலன் அளுந்தூர் ஊராட்சியில் சுற்றுச்சூழல் ஆரோக்கியம் சுகாதாரம் பற்றியும் ஒருங்கிணைப்பாளர் யசோதை கீழநாகமங்கலம் ஊராட்சியில் டெங்கு காய்ச்சல் விழிப்புணர்வு பற்றியும் ஒருங்கிணைப்பாளர் சுதாகர் இனாம்குளத்தூர் கீழப்பட்டி கிராமத்தில் பருவநிலை மாற்றம் மற்றும் எல் நினோ பற்றியும் ஒருங்கிணைப்பாளர் ரட்சனா மத்திய மாநில அரசு திட்டங்களை அறிவிப்பதற்காக டிஜிட்டல் போர்டு வைப்பது தொடர்பாகவும் சேதுராப்பட்டி ஊராட்சியின் சூராவளிப்பட்டியில் ரோட்டரி கிளப் ஆப் திருச்சிராப்பள்ளி சக்தியுடன் இணைந்து குஜிலியன் குளம் தூர்வாருதல் சேதுராப்பட்டி ஊராட்சி மன்ற அலுவலகத்தில் உன்னத் பாரத அபியான் இயக்கம் சார்பாக செங்குத்தாக சூழலும் சிறுகாற்றாலை அமைப்பது மழைநீர் சேகரிப்பு தொட்டி திட்டம் பற்றியும் மக்களுக்கு எடுத்துரைத்தாரர்கள்
கிராம மக்களின் அன்றாட வாழ்க்கைத் தேவைகள், அடிப்படை வசதிகள், கல்வி, சுகாதாரம், குடிநீர், சாலை வசதி, வாழ்வாதாரம் மற்றும் அரசு நலத்திட்டங்கள் தொடர்பான தேவைகள் மற்றும் பிரச்சினைகள் குறித்து கிராம மக்களுடன் கலந்துரையாடி அறிந்து கொண்டது இந்நிகழ்வின் முக்கிய நோக்கமாக இருந்தது,


மேலும், கிராம மக்களின் பங்கேற்புடன் அவர்களது வளர்ச்சித் தேவைகளை அடையாளம் கண்டு, அரசுத் திட்டங்கள் மற்றும் சமூகப் பங்களிப்புகளின் மூலம் அவற்றை முன்னெடுப்பதற்கான வாய்ப்புகள் குறித்து விவாதிக்கப்பட்டன இக்கூட்டத்தில் வட்டார வளர்ச்சி அலுவலர் துணை வட்டார வளர்ச்சி அலுவலர் ஊராட்சி மன்ற செயலாளர்கள் கிராம பொது மக்கள் கல்லூரி மாணாக்கர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.














