• Home
  • தமிழ்நாடு
  • செயின் ஜோசப் கல்லூரியில் பன்னாட்டு கருத்தரங்க நிறைவு விழா!
தமிழ்நாடு

செயின் ஜோசப் கல்லூரியில் பன்னாட்டு கருத்தரங்க நிறைவு விழா!

Email :33

செயின் ஜோசப் கல்லூரியில் பன்னாட்டு கருத்தரங்க நிறைவு விழா!
கல்லூரி முதல்வர் தலைமையில் நடைபெற்ற கருத்தரங்க நிறைவு விழாவில் முனைவர் டேவிட் வில்சன் வரவேற்புரையாற்றினார். கல்லூரியின் இணை முதல்வர் முனைவர் த.குமார் வாழ்த்துரையாற்றினார். சென்னைப் பல்கலைக் கழக மேனாள் தமிழ் மொழித்துறைத் தலைவர் ய.மணிகண்டன் கருத்தரங்க நிறைவுரையாற்றினார். அவர் உரையில் தமிழில் உலகுக்கே ஞானம் வழங்கும் நூல்கள் நிறைந்து இருக்கின்றன என்கிற கருத்தை நடுவமிட்டு உரையாற்றினார். நிறைவில் கருத்தரங்கப் பொருளர் முனைவர் ரெ.நல்லமுத்து நன்றியுரையாற்றினார். தமிழ்த்துறைப் பேராசிரியர்கள் லா.சார்லஸ், போ.ஜான்சன், ம.தனலெட்சுமி, லோ.ரூபா மற்றும் அ.ஞா.உமா மகேஸ்வரி  ஆகியோர் நிகழ்வுகளை நெறியாள்கை செய்தனர்.

தமிழ் பாரம்பரியத்தை வெளிப்படுத்தும் ஊர்வலமும், கடந்த 2000 ஆம் ஆண்டு முதல் தமிழாய்வுத்துறை வெளிக்கொணர்ந்த ஆய்வுக் கோவைகள் அனைத்தும் சேகரிக்கப்பட்டு அடைக்கப்பட்டிருந்த கருத்தரங்க ஆய்வுக் கோவைகள் காட்சியகமும் அனைவரின் பாராட்டையும் பெற்றது. தமிழ் ஆய்வாளர்கள், தமிழ் ஆர்வலர்கள், எழுத்தாளர்கள், தமிழாய்வுத்துறை மற்றும் பிறதுறைப் பேராசிரியர்கள், முனைவர் பட்ட ஆய்வாளர்கள், மாணவர்கள் உள்பட 364 பேர் இக்கருத்தரங்கில் பங்கேற்றுப் பயன்பெற்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Posts