• Home
  • தமிழ்நாடு
  • திருச்சியில் நாளை பெண்களுக்கான மாவட்ட அளவிலான செஸ் போட்டி
    திருச்சி சீதாலட்சுமி ராமசாமி கல்லூரியின் பவள விழா (Platinum Jubilee) ஆண்டை முன்னிட்டு, சீதாலட்சுமி ராமசாமி கல்லூரி மற்றும் திருச்சி மாவட்ட செஸ் சங்கம் இணைந்து பெண்களுக்கான மாவட்ட அளவிலான செஸ் போட்டியை நடத்துகின்றன.
தமிழ்நாடு

திருச்சியில் நாளை பெண்களுக்கான மாவட்ட அளவிலான செஸ் போட்டி

Email :23

இந்தப் போட்டி நாளை (07.10.2026, புதன்கிழமை) காலை 10 மணிக்கு, திருச்சி சீதாலட்சுமி ராமசாமி கல்லூரி வளாகத்தில் நடைபெறுகிறது.
போட்டியில் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த மாணவிகள் மற்றும் செஸ் ஆர்வலர்கள் கலந்து கொண்டு தங்களது திறமையை வெளிப்படுத்த உள்ளனர்.
செஸ் விளையாட்டு மாணவிகளின் சிந்தனைத் திறன், நினைவாற்றல், ஒருமுகப்படுத்துதல், திட்டமிடும் திறன் மற்றும் முடிவெடுக்கும் ஆற்றலை மேம்படுத்தும் சிறந்த அறிவுசார் விளையாட்டாகும். பெண்களிடையே செஸ் விளையாட்டை ஊக்குவிக்கும் வகையில் இப்போட்டி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
சீதாலட்சுமி ராமசாமி கல்லூரி 2026ஆம் ஆண்டில் தனது 75 ஆண்டுகால பவள விழாவை கொண்டாடி வருகிறது. கல்லூரி மற்றும் திருச்சி மாவட்ட செஸ் சங்கத்தின் சார்பில் நடைபெறும் இப்போட்டி, பவள விழா கொண்டாட்டத்தின் சிறப்பு நிகழ்வுகளில் ஒன்றாக அமைகிறது.
நிகழ்வு: பெண்களுக்கான மாவட்ட அளவிலான செஸ் போட்டி
தேதி: 07.10.2026 – புதன்கிழமை
நேரம்: காலை 10.00 மணி
இடம்: சீதாலட்சுமி ராமசாமி கல்லூரி, திருச்சி
ஏற்பாடு: சீதாலட்சுமி ராமசாமி கல்லூரி & திருச்சி மாவட்ட செஸ் சங்கம்
“சிந்தனையை வளர்க்கும் சதுரங்கம் – சாதனையை உருவாக்கும் மாணவிகள்!”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Posts