தூய வளனார் கல்லூரியில் நாட்டு நலப்பணித் திட்ட மாபெரும் கலைத் திருவிழா! திருச்சிராப்பள்ளி தூய வளனார் தன்னாட்சிக் கல்லூரியில் நாட்டு நலப்பணித் திட்டத்தின் சார்பாக 2026-27 ஆம் ஆண்டிற்கான மாபெரும் கலைத் திருவிழா சமுதாய மன்றத்தில் நடைபெற்றது.
நிகழ்ச்சியை கல்லூரி முதல்வர் முனைவர். ஆரோக்கியம் அவர்கள் தொடங்கி வைத்தார்.

இவ்விழாவில் பேச்சுப் போட்டி, கவிதை, கட்டுரை, ரங்கோலி, குறும்படம், தனிநபர் நடனம், தனிநபர் பாடல் மற்றும் முக்கிய நிகழ்வான பட்டிமன்றம் உள்ளிட்ட பல்வேறு போட்டிகள் நடத்தப்பட்டன. 200-க்கும் மேற்பட்ட தன்னார்வலர்கள்* கலந்துகொண்டனர்.
தனிநபர் நடனம், பாடல் போட்டிகளுக்கு முனைவர் சீனிவாசன் நடுவராக பணியாற்றினார்.

பட்டிமன்றத்திற்கு பேராசிரியர் மைக்கேல்ராஜ் நடுவராக இருந்து தீர்ப்பு வழங்கினார்.
நிறைவு விழாவில் பல்கலைக்கழக ஒருங்கிணைப்பாளர் பேராசிரியர் பி. ராமஜெயம் சிறப்புரை ஆற்றினார்.

இந்நிகழ்ச்சியினை நாட்டு நலப்பணித் திட்ட ஒருங்கிணைப்பாளர்கள் முனைவர் விஜயகுமார், பேராசிரியர் அருள் ஞானப்பிரகாசம், முனைவர் ஜோ. அற்புத சகாயராஜ் முனைவர் அடைக்கலராஜ், முனைவர். அல்போன்சா ஜூலியட் ஹெலனா மற்றும் முனைவர் ஜானி தாகூர் ஆகியோர் ஒருங்கிணைத்து சிறப்பாக நடத்தினர்.
போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.














