• Home
  • தமிழ்நாடு
  • புனித வளனார் கல்லூரியில் அருட்தந்தை ஜான் பிரிட்டோ தொழில்நுட்பக் கழகம் துவக்கம்! திருச்சி புனித வளனார் கல்லூரி (தன்னாட்சி) தாவரவியல் துறை சார்பில் அருட்தந்தை ஜான் பிரிட்டோ தொழில்நுட்பக் கழகத்தின் துவக்க விழா இன்று 07.10.2026 காலை தாவரவியல் துறை கருத்தரங்கு கூடத்தில் சிறப்பாக நடைபெற்றது.
தமிழ்நாடு

புனித வளனார் கல்லூரியில் அருட்தந்தை ஜான் பிரிட்டோ தொழில்நுட்பக் கழகம் துவக்கம்! திருச்சி புனித வளனார் கல்லூரி (தன்னாட்சி) தாவரவியல் துறை சார்பில் அருட்தந்தை ஜான் பிரிட்டோ தொழில்நுட்பக் கழகத்தின் துவக்க விழா இன்று 07.10.2026 காலை தாவரவியல் துறை கருத்தரங்கு கூடத்தில் சிறப்பாக நடைபெற்றது.

Email :20

புனித வளனார் கல்லூரியில் அருட்தந்தை ஜான் பிரிட்டோ தொழில்நுட்பக் கழகம் துவக்கம்! திருச்சிராப்பள்ளி: புனித வளனார் கல்லூரி (தன்னாட்சி) தாவரவியல் துறை சார்பில் அருட்தந்தை ஜான் பிரிட்டோ தொழில்நுட்பக் கழகத்தின் துவக்க விழா இன்று (07.10.2026) காலை 11.45 மணிக்கு தாவரவியல் துறை கருத்தரங்கு கூடத்தில் சிறப்பாக நடைபெற்றது.
விழாவிற்கு கல்லூரி முதல்வர் அருட்தந்தை முனைவர் கா. ஆரோக்கியம் SJ அவர்கள் ஆசியுரை வழங்கி துவக்கி வைத்தார். தாவரவியல் துறைத் தலைவர் முனைவர் சகாய சதீஷ் அவர்கள் தலைமை உரை ஆற்றினார். முனைவர் பாஸ்டின் சர்ச்சில் வரவேற்புரை ஆற்றினார். முனைவர் ஜானி குமார் தாகூர் முன்னிலை வகித்தார்.

சிறப்பு விருந்தினராக SHEPHERD திட்டத்தின் முதுநிலை ஒருங்கிணைப்பாளர் திரு. S. லெனின் அவர்கள் கலந்து கொண்டு சிறப்புரை ஆற்றினார். இக்கழகத்தின் குறிக்கோள் “புதுமை படை – பயிரிடு – நிலைநிறுத்து” என்பதாகும் என்றும், மாணவர்கள் பாரம்பரிய தாவரவியலை நவீன தொழில்நுட்பத்துடன் இணைத்து சுய தொழில் முனைவோராக வளர இக்கழகம் உதவும் என்றும் அவர் குறிப்பிட்டார்.மாணவர்கள் பாரம்பரிய தாவரவியல் அறிவை நவீன தொழில்நுட்பத்துடன் இணைத்து சுய தொழில் முனைவோராக மாற வேண்டும் என்றும், ஹைட்ரோபோனிக்ஸ், திசு வளர்ப்பு, காளான் வளர்ப்பு போன்றவை குறைந்த முதலீட்டில் நிறைந்த லாபம் தரும் என்றும் எடுத்துரைத்தார்.

இக்கழகத்தின் குறிக்கோள் “புதுமை படை – பயிரிடு – நிலைநிறுத்து” என்பதாகும். இதன் கீழ் பசுமை தொழில்நுட்ப ஆய்வகம், உயிர் உற்பத்தி கூடம், மூலிகை பொருட்கள் தயாரிப்பு பிரிவு, டிஜிட்டல் தாவரவியல் பூங்கா ஆகியவை செயல்படும் என தெரிவிக்கப்பட்டது. 90% தண்ணீர் மிச்சப்படுத்தும் நீர்வழி வேளாண்மை, 15 நாளில் அறுவடை தரும் காளான் வளர்ப்பு (ரூ.1500 முதலீடு – ரூ.4000 லாபம்), மூலிகை சோப், எண்ணெய் தயாரிப்பு ஆகியவற்றின் செயல்விளக்கம் மாணவர்களுக்கு அளிக்கப்பட்டது.
விழாவில்  தாவரவியல் துறை மாணவர்கள் 50 பேர் பங்கேற்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Posts