திருச்சி சீதாலட்சுமி ராமசாமி கல்லூரியில் மாவட்ட அளவிலான மகளிர் செஸ் போட்டி!
திருச்சி: சீதாலட்சுமி ராமசாமி கல்லூரியின் பவள விழாவை முன்னிட்டு, 07.10.2026 காலை 10.30 மணியளவில் மாவட்ட அளவிலான மகளிர் செஸ் போட்டி, திருச்சி மாவட்ட செஸ் சங்கத்துடன் இணைந்து கல்லூரி வளாகத்தில் நடைபெற்றது.
இப்போட்டியில் திருச்சி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த 250-க்கும் மேற்பட்ட மாணவிகள் ஆர்வத்துடன் கலந்து கொண்டு தங்களது செஸ் திறமையை வெளிப்படுத்தினர். பல்வேறு சுற்றுகளாக போட்டிகள் நடைபெற்றன.

போட்டியின் நிறைவு மற்றும் பரிசளிப்பு விழா இன்று மாலை 5 மணிக்கு கல்லூரியின் மாணிக்க விநாயகம் அரங்கத்தில் நடைபெறுகிறது.
நிகழ்ச்சியில் கல்லூரியின் உடற்கல்வி இயக்குனர் முனைவர் சுதமதி வரவேற்றார்
விழாவில் கல்லூரி முதல்வர் முனைவர் எம்.வி. அல்லி சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு போட்டியை தொடங்கி வைத்தார். மேலும், உருமு தனலட்சுமி குழும கல்வி நிறுவனங்களின்

நிர்வாக அலுவலர் மேஜர் டாக்டர் என்.எஸ். சிவகுமார், திருச்சி மாவட்ட செஸ் சங்க செயலாளர் தினகரன், மக்கள் சக்தி இயக்கம் மாநில பொருளாளர் கே.சி.நீலமேகம் உள்ளிட்ட முக்கிய பிரமுகர்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனார்.
விழாவில் போட்டியின் அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டு, வெற்றி பெற்ற மாணவிகளுக்கு பரிசுகள் மற்றும் சான்றிதழ்கள் வழங்கப்பட உள்ளன.
மாணவிகளின் அறிவுத்திறன், சிந்தனைத்திறன் மற்றும் விளையாட்டு ஆர்வத்தை ஊக்குவிக்கும் வகையில் இப்போட்டி அமைந்துள்ளது.














